Tuesday, 5 December 2017

கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

#கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்




அகநானூற்றில் யாளி

அகநானூற்றில் யாளி 
----------------------------------
யாளி என்பது தமிழகக் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும் தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி - சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
---------------------------------------------------------------------

மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் உற்சவர் சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் வருவது வழக்கம்..
-----------------------------------------------------------------
அதைப்பற்றிய அகநானூற்று பாடல்
.
வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்
.
--– நக்கண்ணையார்,(அகநானூறு 252 : 1-4)
.
ஆளியானது (யாளி)
பாய்ந்து வந்து
உயர்ந்த நெற்றியினையுடைய
யானையின்
புள்ளி பொருந்திய
முகத்தைத் தாக்கி
அதன்
வெண்ணிறத் தந்தத்தினைப்
பறித்தெடுக்கும்.

WWW.VAAA.IN

பசுமை புரட்சியின் கதை -5

பசுமை புரட்சியின் கதை -5 /கீழ்வெண்மணி படுகொலை 
------------------------------------------------------------------

காலம் காலமாக இணைத்து
விவசாய உற்பத்தியில் ஒன்றாக ஈடுபட்ட சமூகம்... 
எப்படி இப்படி மாறியது...
காரணம் என்ன ?
அதற்கான சூழல் எப்படி உருவானது ..?
காரணத்தை தேடி ஒரு பயணம் ..
----------------------------------------------------------

இந்திய ரக விதைகள்
விளைச்சலுக்கு சற்றுக் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டாலும்
குறைவான விவசாயக் செலவுதான் இருந்தது.
-
.” உயர் ரக விளைச்சலைக் கொடுக்கும் விதைகள்”
‘ குறுகின காலத்தில் விளைத்து விடும்’
அதிக மகசூல்
.
- இதெல்லாம் விவசாயிகளுக்கு கேட்க கேட்கப் பரவசமாகிப் போய் விட்டது

புது ரக விதைகள்
இந்தியாவெங்கும் வழங்கப்பட்டது
புதிய ரக இறக்குமதி செய்யப்பட்ட
கலப்பின விதைகளை விதைத்ததும்
விவசாயிகளுக்கு
இது என்ன வியாதி?.என்றே தெரியவில்லை.
.
விவசாயத்தை நவீனப்படுத்திவிட்டால்
விளைச்சல் அமோகமாக இருக்கும்
என்று தான்
விவசாயிகள் பலரும் நம்பினார்கள்
பழைய முறையிலான விவசாயத்தை விட
புதுமுறையில் விவசாயிகளுக்குச்
செலவு
அதிகமானது.
.
உற்பத்திச் செலவும்
விவசாய வருமானமும்
சரிசமமாகி விடும் போது
சமயங்களில்
வருமானத்தைவிட உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கும் போது
.
தவிர்க்க முடியாமல் விவசாயி
மேலும் கடன் வாங்க வேண்டியதாகி விடுகிறது.
.
ஏற்கெனவே உள்ள
கடன்கள் போதாதென்று
.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு
இன்னும்
கூடுதலாக
கடனாளியாகி விடுகிறான்
விவசாயி.
.
1970-க்கு பிந்திய வருஷங்களில்
மூன்று ஏக்கருக்கக் கீழ் வைத்திருக்கும்
விவசாயிகள்
பலர்
விவசாய உற்பத்தி செலவைத்
தாக்குப் பிடிக்க முடியாமல் -
நிலமற்ற
கூலிகளாக மாறியுள்ளனர்.
.
பசுமைப் புரட்சிக்கும்
உலக வங்கிக்குமே நெருக்கமான தொடர்பு உண்டு.
பசுமைப் புரட்சி அமுல்படுத்தப்பட்ட பிறகுதான்
மூன்றாம் உலக வங்கி அளிக்கம் கடனும் தாராளமாக இருந்திருக்கிறது.
.
இந்தியாவும்
இந்தியாவிலுள்ள
ஒவ்வொரு விவசாயியும்
கடன் பட்டதனால்
என்ன பிரமாதமான முன்னேற்றம் வந்து விட்டது?
உர விலையிலிருந்து
பூச்சி மருந்துகள் விலை வரை
இரட்டிப்பாக உயர்ந்து. கொண்டே போனது
.
73-ல் ரூ 2.30-க்கு 1 கிலோ யூரியா வாங்க முடிந்தது.
75ல் அதுவே ரூ.4.35 ஆக உயர்ந்தது.
.
இப்படி
அடுத்தடுத்து விலையேற்றம்
இப்படிப்பட்ட விலையேற்றம்
ஏதோ தற்செயலானதுதானா?
.
1967-ல் பசுமைப் புரட்சி –
பல நாடுகளில்
நடைமுறைப்படுத்தப் பட்ட போது
ஒரு டன் யூரியாவின்
மொத்த விற்பனை விலை 680 ருபாய்தான்.
.
காலப்போக்கில்
பல நாடுகள் உரத்தைக் தாராளமாக உபயோகிக்க ஆரம்பித்த உடனேயே
உரத்துக்கான
அடக்க விலை ரூ.1032 ஆகவும்
விற்பனை விலை ரூ.2068 ஆகவும்
விலையைத் தீர்மானித்தது
இந்த வங்கிதான்
.
அதாவது
ஆயிரத்துக்கு மேல்
ஒரு டன்னுக்கு
லாபம்
இந்த இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன
ஏற்த்தாழ
எண்பதுக்கும் அதிகமாக
பெரிய உரத் தொழிற்சாலைகள்
அந்திய நாடுகளின்
மூலதனத்தோடும்
தொழில் நுட்பத்தோடும்
ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன
.
51-ல் 66000 டன் அளவுக்கு
உரங்களை மட்டும் உபயோகித்து இந்தியா
.
84-ல் 64,18,000 டன் உரங்களை உபயோகிக்கும் அளவு இந்திய விவசாய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.
.
உற்பத்திச் செலவும் அதிகரித்தது
உற்பத்தியும் அதிகரித்தும்
கூட உழைப்புக் கூலி அதிகரிக்கவில்லை
.
.உற்பத்திச் செலவு
பூச்சிமருந்து
உரமென்று
கூடுவதைக் கணக்கில் காட்டி
கூலியை அதிகரிக்க மறுத்தார்கள்
நிலச் சொந்தக்காரர்கள்
.
இதனால்
கூலி உயர்வுப் போராட்டங்கள் நிகழ்ந்தன
. 68 ல் கிழ்வெண்மணியில்
44ரிஜன கூலித் தொழிலாளர்கள்
உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
.
இன்றும் இந்தியாவில்
பசுமைப் புரட்சியின் விளைவாக
ஏற்பட்ட முக்கிய கரும்புள்ளியாக
.
கீழ்வெண்மணிச் சம்பவம்
விவசாயித் துறையைச் சார்ந்த
பல விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.


.
.
நன்றி
திரு மணா அவர்கள் எழுதிய
தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள் நூலிலிருந்து
-----
முதலாளித்துவமும் பொதுவுடைமையும்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
-----
இனி இதன்
காரணத்தை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் நன்றி !.

இணையத்தளத்தில்
தமிழ் புத்தகங்கள்
வாங்க
WWW.VAAA.IN

நாமார்க்கும் குடியல்லோம்


மன்னாதி மன்னர்களும் மண்ணாகி போன பூமி இது 
----------------------------------------------------------------

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்

**************************
ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும். பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன் என்பது வெளிப்படை. ஆக பயத்தை வெல்வதும் அவனருளாலே முடியும். நாம் செய்ய வேண்டியது யாதெனின் அவன் பால் நம்பிக்கை. எம் தலையை பலவாக கொய்தாலும் பயம் கொள்ளோம். எம் தலைவன்,முதல்வன்,இறைவன்,உயிர்,ஊன் அனைத்துமானவன் இருகின்றான் என்ற நம்பிக்கை. மரணம் எவ்வழியில் வந்தாயினும் யாம் எவ்வாறு கொல்லபடினும் எம்மை ஆட்கொள்ள பெம்மான் இருகின்றார் என்ற நம்பிக்கை. பயம் பூஜ்யமாக வேண்டும் என்றார் வள்ளலார் பெருமான் என்பர். எவ்வாறு பயத்தை பூஜ்யம் ஆக்குவது. யாரிடமும் கேட்க வேண்டாம். தங்களுக்குளே எவ்வாறு என்று கேட்டு கொள்வோம். எல்லாமாய் இருந்து இயக்கும் எம்பெரும்மான் திருவடி தோன்றின் வேறு விளக்கம் யாரும் கூற வேண்டுமோ. சிவ சிவ ! சிவ சிவ ! சிவ சிவ !

நமக்காக திருநாவுக்கரச பெருமான் அருளிய பாடல் வரிகளை பார்த்தால் தெளிவு கொள்ளலாம்.
-------------------------------------------------------------------

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.
------------------------------------------------------------------

எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.

www.vaaa.in

The Online Bookshop

ஒருநாள் செல்லலம்

அதியமானிடம் பரிசில் பெற விரும்பியவர் 
ஒரு நாள் பரிசில் பெற செல்லலாம் 
பல நாள் பரிசில் பெற செல்லலாம் 
பலநாள் பலரோடு சென்று பரிசில் கேட்க சென்றாலும் 

முகம் சுணங்காமல் 
முதல் நாள் பார்ப்பது போன்று முகம் மலர 
வரவேற்று 
பரிசில் வழங்குவான் 
-----
ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ
அணிபூ ணணிந்த யானை யியறேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம் 5
நீட்டினு நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்கவன் றாளே. 10 (101) 
-----
திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர் பாடியது.
-
உரை: 
.
ஒருநாள் செல்லலம் - யாம் ஒருநாட் செல்லேம்; 
இரு நாள் செல்லலம் - இரண்டுநாட் செல்லேம்; 
.
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
- பலநாளும் பயின்று பலரோடு கூடச்செல்லினும்;
.
தலை நாள் போன்ற விருப்பினன் - முதற் சென்ற நாள் போன்ற விருப்பத்தை யுடையன்; அணி பூண் அணிந்த யானை - அணிகல மணிந்த யானையையும்; இயல்தேர் அதியமான் - இயன்ற தேரையுமுடைய அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் - பரிசில் பெறுங் காலை; நீட்டினும் நீட்டா தாயினும் - நீட்டிப்பினும் நீட்டியா தொழியினும்; 
.
யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல - யானை தனது கொம்பினதிடையே வைக்கப்பட்ட கவளம் போல; கையகத்தது - நமது கையகத்தது அப் பரிசில்; அது பொய்யாகாது - அது தப்பாது; அருந்த ஏமாந்த நெஞ்சம் - உண்ணஆசைப்பட்ட நெஞ்சே; வருந்த வேண்டா - நீ பரிசிற்கு வருந்த வேண்டா; 
.
.
அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்வதாக எ-று. அதியமான் விருப்பின னென முன்னே கூட்டுக. கோட்டிடை வைத்த கவளம் போல என்றதற்கு, யானை வாயிற்கொண்டு நுகரு மளவும் கோட்டிடை வைத்த கவளம் போலப் பரிசில் கையகத்தது என்க; அன்றிக் களிறு கோட்டிடை வைத்த கவளத்தைச் சிறிது தாழ்த்ததாயினும், அஃது அதற்குத் தப்பாதவாறு போலப் பரிசில் சிறிது தாழ்ப்பினும், நமக்குத் தருதல் தப்பாது என்பதாக்கி யுரைப்பினு மமையும். தாளை முயற்சி யென்பாரு முளர்.
.
அருந்த வென்பது அருந்தெனக் கடை குறைக்கப்பட்டது. அருந்து என முன்னிலையாக்கி யுரைப்பினுமமையும்.
விளக்கம்: ஒரு நாள் இருநாள் அல்ல; பன்னெடு நாட்கள் தனித்துச் செல்வதின்றிப் பலரோடு கூடிப் பன்முறையும் சென்றபோதும் தலைநாளில் வரவேற்று வேண்டுவன அளித்ததுபோலவே நல்குவன் என அதியமானது கொடை நலத்தைப் பாராட்டியது இப்பாட்டு. தலை நாள் - முதல் நாள்; "தண்டாக் காதலும் தலைநாட்போன்மே"(அகம்.332) 
.
என்று பிறரும் கூறுப. கொடை யெதிர்வார் கொடைப் பொருளைப் பெறுதற்குத் தாழ்த்தால் தாழ்க்கலாமே யன்றி, அதியமான் கொடுத்தலில் தாழ்ப்பதிலன் என்பது தோன்ற, "பரிசில் தரூஉங் கால"மென்னாது, "பெறூஉங் கால"மென்றார். யானை கோட்டிடை வைத்த கவளம் அதன் வாய்ப்படுதலில் தவறாது; அது போல அவனது கொடையினைப் பெறுதல் தவறாது என்றதற்கு., 
.
"யானை தன ் கோட்டிடை வைத்த கவளம் போலக், கையகத் ததுவது பொய்யா காதே" யென்றார். இதற்குக் காட்டப்பட்ட பிற பொருள்கள் உரையிற் கூறியதுபோல அத்துணைச் சிறப்பிலவாகலின், 
.
"உரைப்பினு மமையு"மென்றொழிந்தார். அருந்த ஏமாந்த வென்புழிப் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. இக் கருத்தையே, உரைகாரர், "அருந்த வென்பது அருந்தெனக் கடைக் குறைக்கப்பட்ட"தென்றார்.
.
ஏமாந்த நெஞ்சே, நீ அருந்துவாயாக என்று பொருள்பட, "முன்னிலை யேவலாக்கி யுரைப்பினு மமையும்"என்றார். ஏமாத்தல். ஆசைப்படுதல்; "காமர் நெஞ்ச மேமாந் துவப்ப"(புறம்.198)
.
எனப் பிறரும் இப்பொருளில் வழங்குதல் காண்க. நெஞ்சம்: அண்மை விளி. வாழ்க அவன் என்பது, வாழ்கவன் என வந்தது. அருள்புரியுந் தக்கோரை, அவர் அருள் பெற்றோரும் பெற விழைவோரும் வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்தும் மரபு கருதி, "வாழ்கவன் தாளே"என்றார். பிறாண்டும் இவ்வாறே "வாழ்கவன் தாளே"(புறம்.103) என வாழ்த்துதல்
காண்க.
------------
WWW.VAAA.IN

அரசியல் தவறே .......

அரசியல் தவறே .......
**********************************

வீட்டிற்கு வேண்டிய 
பொருட்களையெல்லாம் 
கணவனே ஈட்ட வேண்டுமென்பதும் ,


அதனால்
மனைவியும் ,இளமக்களும்
இன்பமாக வாழ வேண்டும் என்பதும் ,
பண்டையோர் கருத்து .
.
வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
.
-( குறு -135:1-2) எனும் குறுந்தொகை செய்யுள் இதனை புலப்படுத்தும் .
.
இக்காலத்தில்
காலை முதல் மாலை வரை
ஆடவர் கடுமையாக உழைத்தும் ,
குடும்பத்துக்கு போதிய பொருள் தேடவோ உணவுப்பொருள் கொள்ளவோ முடியவில்லை இதனாலேயே
பெண்டிர் வெளியேறி
பணி செய்ய வேண்டியுள்ளது .
.
ஆகவே
இன்று அவர் கடமை
இருமடங்காக பெருகியுள்ளது .
.
இந்நிலைமை மக்கட் பெருக்கையும் ,உணவு தட்டையும் காட்டுமேனும் ,
இதற்கு
அடிப்படை காரணியம்
.
அரசியல் தவறே .......
.
பண்டைத் தமிழர் நாகரிகம் நூலில் பாவாணர்
.
WWW.VAAA.IN
இணைய வழி தமிழ் நூல் விற்பனையாகம்

பசுமை புரட்சியின் கதை - 4

பசுமை புரட்சியின் கதை - 4
--------------------------------------------

இந்தியாவிலிருந்த
லட்சக்கணக்கான - 
.
இந்த மண் வளத்தோடு நெருங்கின 

நெல்விதைகள் எல்லாம் சர்வதேச ஆராய்ச்சிக்கூட வரிசைக்குப் போய் விட
.
கொடுத்ததை விதைக்க வேண்டி
சூழ்நிலைக்கு உள்ளாகிப் போனார்கள்
இந்திய விவசாயிகள்.
.
தங்களுக்கு நுணுக்கமாகப் தெரிந்த 
நெல்விதைகள் 
பறிபோன மாதிரி ஆகி விட 
.
தங்களுக்குச் சம்பந்தமில்லாத நெல்விதையை
விதைத்து
.
பெயர் தெரியாத
பெயர் சூட்டப்படாத விதவிதமான 
நெல் நோய்களைப் 
பார்த்து கொண்டு
.
உச்சரிக்கவே வராத ரசாயன உரங்களையும் 
பூச்சி மருந்துகளையும் 
\தெளித்துக் கொண்டு 
.
விவசாயிகள் உட்கார்ந்து இருப்பது 
எவ்வளவு துரதிருஷ்டமான மாற்றம் ?
.
நன்றி திரு .மணா அவர்கள் 
.
இணையத்தில் புத்தகங்கள் வாங்க 
WWW.VAAA.IN

ஆண் கற்பு பெண் கற்பு

ஆண் கற்பு :-/பெண் கற்பு :- WWW.VAAA.INTamil books
**********************************

ஆண் கற்பு :-

****************
கற்பு என்ற சொல் ஏதோ பெண்களுக்கே உரித்தானது போல ஒரு மாயை காட்டப்பட்டுள்ளது...அது ஆண்களுக்கு தான் அதிகமாக பொருந்தும்...

முன்பு ஆண்கள் கற்பொழுக்கம் பேணவில்லை என்ற கட்டுகதை அவிழ்த்துவிடப்பட்டுள்ளது...அதற்கான எடுத்துக்காட்டாக பல அரசர்களையும் சிலப்பதிகாரத்தில் உள்ள கோவலன் கதையையும் சொல்லுகிறார்கள்...

தமிழ்நாட்டில் இருந்த அரசர்கள் ஆரம்ப காலம் தொட்டே ஏதோ ஒரு சமயத்தை தழுவியர்களாகவும் அந்த சமயத்தை நடத்தும் சமயதுறவிகளால் இயக்கப்படுபவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் அதனால் அவர்கள் அரசியலுக்காகவும் தன் சுயஇன்பத்திற்காகவும் இது போன்ற கற்பை கெடுக்கும் பல பெண் உறவுகளை வைத்து இருந்தனர் அதனால் அவர்கள் தமிழ் ஆண்மக்களின் பின்பம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மேலும் எதை தெரிந்து கொள்ள முற்பட்டாலும்
" முடிமக்கள் வரலாறு வேறு /குடி மக்கள் வரலாறு வேறு /பழங்குடி வரலாறு வேறு "
என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

அடுத்து கோவலன் கண்ணகி கதை அதில் கோவலன் கற்பொழுக்கம் இல்லாதவனாக காட்டப்படுவான்...இது வெறும் கதை அதை முதலில் தமிழர்கள் ஏற்றுகொள்ள வேண்டும்.இதே கதை ஆப்பிரிக்கா காடுகளில் வாழும் பழங்குடிமக்களிடம்#கண்டகி என்ற பெயரில் உள்ளது...ஆனால் அதில் கண்டகி கணவன் கற்பொழுக்கம் உள்ளவன்...
இப்படி தான் அனைத்துமே திரிக்கப்பட்டுள்ளது...

ஆண்கள் கற்பொழுத்துடன் இல்லை எனில் தற்காலம் வரை சாதி என்ற ஒரு கட்டமைப்பே இருந்து இருக்காது...
சாதி தவறாக தற்போது பயண்படுத்தப்படலாம் ஆனால் ஆதியில் அது ஒரு தொழில் அடையாளம்.ஆண்கள் கற்பொழுக்கம் இல்லாமல் இருந்து இருந்தால் எப்படி இந்த கட்டமைப்பு இத்தனை நாட்கள் பயணித்து இருக்கும்...

ஆண்கள் கற்பொழுத்துடன் இல்லை பல குடும்பத்துடன் வாழ்ந்தனர் எனில் எப்படி பரம்பரை வாரிசு நிலங்கள் பரிமாரபட்டு இருக்கும்.ஒரு கிராம தற்சார்பாக வாழ்ந்த இன மக்கள் எப்படி குடும்பம் என்ற கட்டமைப்பை இத்தனை ஆண்டுகாலம் கடத்த முடியும்...பெண்களின் கற்புக்கு இணையாக ஆண்களின் கற்பொழுக்கம் பேணப்பட்டு வந்ததால் தான் தற்போது வரை குடும்பம் என்ற தற்சார்பு வாழ்வியலுக்கான அடிப்படை சிதையாமல் வந்து கொண்டே இருக்கிறது...

ஆண்களுக்கு கற்பு இல்லை என்பது முன் நாட்களிலேயே சிலகதைகளின் மூலம் பரப்பி நம்பவைத்துவிட்டார்கள்...

இப்போது அது வேலை செய்யவில்லை...குடும்பம் என்ற தற்சார்பு வாழ்வியல் அடிப்படை சிதையவில்லை
என்பதை அறிந்த

நம் எதிரிகள் பெண்விடுதலை( Tool ஈ.வே.ரா.நா)
என்ற பெயரில்

பெண்களுக்கும் கற்பு இல்லை என்று பரப்புகிறார்கள்

ஆனால் இது இப்போது அதிவேகமாக வேலை
செய்கிறது...இதை பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்

------------------------------------------------------------------------------------------------

பெண் கற்பு :-
********************
கற்பு என்பதை ஆண்கள் ஒரு சில காலத்திற்கு முன்பாக தான் ஆயுதமாக பயன்படுத்தினர்.கற்பு என்பது உடல் உறவுடன் எவ்வளவு தொடர்புகொண்டு உள்ளதோ அதைவிட மனதுடன் அதிக தொடர்புடையது.

ஒரு பெண் எப்போதும் குடும்பஉறவுகளை சொந்தங்களை பேணுவதில் அதிக அக்கரை காட்டுவாள்.அது ஒரு பெண்ணின் இயல்பு அது ஆணிடம் இருக்காது.ஆண் உறவுகளை இயல்பாக உடைக்கும் மூர்க்ககுணம் கொண்டவன்.எனவே ஒரு பெண் அனைவரிடமும் அன்பாக சிரித்து பேசும் தன்னை கொண்டவள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.பெண் இதற்கு முயற்சி செய்ய தேவை இல்லை இயல்பாக அவளுக்கு அனைவரிடமும் அன்பு வரும்...
ஆனால்
கற்பு என்பது அன்பு செலுத்துவதன் கட்டுபாடு அல்ல.
மாறாக மனதை ஒப்படைப்பதன் வரையறை
பூமியில் உள்ள அனைத்து உயிர்களிடமும் மனிதரிடமும் கூட அன்பு செலுத்தலாம்.ஆனால் மனதை கொடுப்பது ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்.இது தான் கற்பு இது ஆணுக்கும் பொருந்தும்.

மனதை ஒருவருக்கு கொடுத்தற்கு பிறகு உடல் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது.ஆனால் மனதை மாற்றி மாற்றி அலையும் தன்மை கொண்டவர்கள் தான் கற்புஇல்லாதவர்கள் என இகழப்படுவார்கள்.

" நான் நினைத்தது போல் இல்லை அதனால் நான் வேறு ஒருவரை நேசிக்கிறேன் " என காரணங்கள் சொல்லப்படும்
எனது கேள்வி " நீங்கள் நினைத்தது போல் அவர்கள் ஏன் இருக்க வேண்டும்? இப்படி நீங்கள் நினைப்பது போலவே இந்த உலகத்தில் ஒரு உயிர் கூட இருக்காது.அவர்களை அவர்களாகவே ஏற்றுகொள்ள ஏன் முடியவில்லை ?
ஒருவரை விட்டுவிலகி வேறு ஒருவரை நாடுகிறார் என்றால் அங்கே அன்பின் பற்றாக்குறை தான் நிகழ்ந்து இருக்கிறது என நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு ஆண் வாழ்க்கைக்கு தகாத விடயங்களை செய்கிறான் நான் அவனை விட்டு வேறு ஒருவனுடன் போகிறேன் என நீங்கள் கூறினால் அங்கே நீங்கள் அவரை அன்பால் நிரப்பவில்லை மேலும் அவர் உங்கள் மீது அன்பாக இல்லை என்பதே உண்மை.
இந்த அன்பு தான் அனைத்திற்குமான அடிப்படை நாதம்
குடும்பம், ஊர் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை உடைக்க நமது எதிரிகள் பயண்படுத்துவது அன்பில்லா தன்மை...
கற்பு என்பதும் இந்த அன்பின் மீது தான் கட்டமைக்கபட்டுள்ளது என்பதை உணரவேண்டும்.

கற்பு நெறி தவறி போகும் பெண்கள் குடும்பத்தை உடைக்கிறார்கள்.என்பதை விட

குடும்பத்தை உடைக்கவே பெண்கள் இதை நோக்கி நம் எதிரிகளால் மிக நுட்பமாக நகர்த்தப்படுகிறார்கள்

ஒரு பெண் கற்புநெறி தவறுகிறாள் என்றால் அது அன்பின் பற்றாக்குறை என்பதை ஆண்களும்...

ஆண் தான் நினைத்தது போலவே நடந்து கொள்ள வேண்டும் என்பது தவறு.அவன் தவறாக நடந்து கொள்ளுவது அன்பின் பற்றாக்குறை தான் என்பதை பெண் உணர்ந்து
கற்பு என்பது ஏதோ கட்டுபாடு என நினைக்காமல் குடும்பம் என்ற அழகியலின் அடிப்படை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
நாம் நமது குடும்பத்தை மீட்டு எடுக்காமல் தற்சார்புவாழ்வியல் பேசி வீண் என்பதால் தான் இதை பேச வேண்டிய தேவை என்பதை நண்பர்கள் தோழிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

விருத்திரன் சே

பசுமை புரட்சியின்? கதை -3

இதுக்கு மேல நாஞ் சொல்ல ஒண்ணுமில்ல 
--------------------------------------------------------------------

பருவமழை தவறியது 
இயற்கையா ? செயற்கையா ?
(பசுமை புரட்சியின்? கதை -3 )
----------------------------------------------



பசுமைப் புரட்சிக்கும்
உலக வங்கிக்குமே நெருக்கமான தொடர்பு உண்டு
.
பசுமைப் புரட்சி
அமுல்படுத்தப்பட்ட பிறகுதான்
மூன்றாம் உலக நாடுகளுக்கு
உலக வங்கி அளிக்கும்
கடனும் தாராளமாக இருந்திருக்கிறது.
.
80-ல் உலக வங்கி கொடுத்த
மொத்தக் கடனில் 43.0 சதவிகிதம்
இந்தியா உட்பட மூன்று நாடுகளுக்கு மட்டும் 30.6 சதவிகிதக் கடனை வழங்கியிருக்கின்றது.
பல நாடுகளுக்கு
இப்படி இவை கொடுக்கிற பணம்
விவசாயத்தை
இயந்திர மயமாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.
.
அமொரிக்கா ஜப்பான் போன்ற நாடுகள் வங்கிகளுக்குப் பின்னாலிருந்தன .
.
மழை பொய்த்து விடுவதற்கும் -
பசுமைப் புரட்சிக்கும்
என்ன தொடர்பு என்று நினைக்கலாம்
.
பசுமைப் புரட்சிக்கு பின்பலமாக இருக்கிற
உலக வங்கிதான்
இன்னொரு காரியத்தையும் செய்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில்
சமூகக் காடுகள் வளர்க்கிற
திட்டத்திற்கு உதவுவதுதான்
அந்தக் காரியம்.
.
ஆஹா….
.
உலக வங்கிக்கு
காடுகளின் மேல் என்ன அக்கறை
உலக வங்கி மூலம் வளார்க்கப்படுவது..
.
நம்மூர் புளிய மரங்களையும் அல்ல .
.
யூகளிப்டஸ் மரம், எண்ணெய் வித்துக்களையும் விளைவிக்கவே இந்தக் கடன்.
..
யூகளிப்டஸ் மரம்
அமோகமாக நிலத்தடி நீரையும்
காற்றிலிலுள்ள ஈரத்தன்மையும் உறிஞ்சக் கூடியது. இதனால் நிலத்தடி கொஞ்சம் ஈரமும் உறிஞ்சப்பட்டுவிட
.
- வறட்சி நிலை
.
இப்படிப்பட்ட
சமூகக் காடுகள் உருவாக
வறட்சி வருவதும் நீடிப்பதும் நிச்சயமாக ஒன்று
.
.
வறண்டு போன நிலம்
ஈரப்படமற்ற காற்று
மேகத்திலிருந்து
மழை பொழிவதை குறைக்கும்
.
அயல்நாட்டு மரங்கள்
.
இதுக்கு மேல நாஞ் சொல்ல ஒண்ணுமில்ல .
.
நன்றி
திரு மணா அவர்கள்

www.vaaa.in
The Online Book shop

பசுமை புரட்சியின் கதை 2

மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளரான முனைவர் .ஆர்.ஹெச்.ரிச்சாரியா
தலைமையில் , 
இந்திய நெல் விதைகளை வைத்தே

எப்படி அதிக மகசூல் பெறுவது 
என ஆராய்ச்சி
அப்போது நடந்து கொண்டு இருந்தது .
.
அதில் இருந்த விஞ்ஞானியான
ஆர்.கங்காதரன்
புது விதமான இந்திய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான நெல் விதைகளை உருவாக்கினார் .அது குறுகிய காலத்துள் விளைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கொண்டிருந்தது .
.
சிறப்பான அம்சங்களுடன் இருந்த
இந்திய விஞ்ஞானிகளே கண்டறிந்த நெல் விதைகளை அமுல் படுத்தாமல் ,
.
மணிலாவிலிருந்து நெல் விதைகளை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் .
இந்தியா ஆராய்ச்சி நிறுவன டைரக்டரான முனைவர் .ஆர்.ஹெச்.ரிச்சாரியா.
.
அப்போது இந்திய விவசாய அமைச்சரான சி.சுப்ரமணியத்திடம்
இந்த பிரச்சினையை ஆர்.ஹெச்.ரிச்சாரியா
கொண்டு சென்றும், கூட ..
ஆர்.ஹெச்.ரிச்சாரியா தான்
டைரக்டர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்

நன்றி திரு மணா

www.vaaa.in

தீக்கடைக் கோல்


தீக்கடைக் கோல் 
சக்கி முக்கி கல் 
என்பன மனிதர்கள் தீ உருவாக்க பயன்படுத்திய கருவிகள் .



*
தேய்ப்பதால் தீ உருவாகிறது 
தேய் - தீ 
தீ - தெய்வம் -தேவன் போன்றவை ஒரே மூலத்திலிருந்து வந்த வார்த்தைகள் 
தேவி பெண்பால் ,
தேவர் -பலர்பால் 
*
புலவர் குழந்தை எழுதிய 
தொல்காப்பியர் கால தமிழகம் நூலிலிருந்து 
*
WWW.VAAA.IN
The Online Book Shop

திருமுறை கண்ட சோழன்

திருமுறை கண்ட சோழன் 

சதயவிழா 

சைவ சமயத்தின் பன்னிரு திருமுறையை தொகுத்தவன் .
சைவ திருக்கோவில்களில் தமிழ்ப் பதிகங்களை ஒலிக்கச் செய்தவன் 

WWW.VAAA.IN
படிக்க வேண்டிய புத்தகங்கள் மட்டும்

பசுமைப் புரட்சி

பசுமைப் புரட்சி 
-------------------------
இந்தியாவில் 1967-ல் நுழைந்தது.

.....
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஆர் ;.ஆர் ;.ஐ.) மூலமாக அமுல்படுத்தப்பட்ட திட்டம்தான் பசுமைப் புரட்சித் திட்டம். 
................
ஐ.ஆர் ;.ஆர் ;.ஐ. என்கிற இந்த அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பற்றி முதலில் பார்க்கலாம்.
...
சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழ (சி.ஜி .ஐ.ஏ.ஆர்  என்று நியுயார்க்கில் ஒரு ஏஜென்ஸி. இதற்கும் உலக வங்கிக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இந்த நிறுவனத்திற்கு - அதாவது ஒரு வருஷத்திற்கு ஏறத்தாழ 140 மில்லியன் டாலா; வரை பட்ஜெட் வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் கீழ் 13 நாடுகளில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்குகின்றன.
..................
இதில் ஓன்றுதான் ஐ.ஆர் .ஆர் ;.ஐ என்கிற மணிலாவில் உள்ள
சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்
...................
இதன் பின்னணியில் இருப்பது ராக்பெல்லரின் போர்டு நிறுவனம் இந்த இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளை வரவழைத்துப் பல்வேறு நாடுகளில் உள்ள பல ரகமான நெல் விதைகளையெல்லம் சேகரித்து இங்கு ஆய்வு நடத்திறதன் பலனாக. ‘ வீரிய விதைகள் ‘ என்று புதுவிதமாக நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தியது. ஐ.ஆர் ,ஆர் ;ஐ. என்கிற இந்த நிறுவனத்தின் முதல்
இரண்டெழு த்தைக் குறிக்கும்)
........................
வீரிய விதைகளை அறிமுகப்படுத்தினால் விளைச்சல் அதிகாரிக்கும் என்று சொல்லப்படுகிறபோது இதனால் என்ன பிரச்சனை என்று பலர் கேட்கலாம் இங்குதான் பிரச்சனை பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்து நெல் விதைகள் சேகரிக்கப்பட்டு அங்கு ஆய்வு நடத்தி புது ரகக் கண்டுபிடிப்புகளாக நெல் விதைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் வெவ்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளுக்கு அந்தந்த நாட்டின் மண் வளத்திற்கேற்ற சீதோஷ்ணத்திற்கேற்ற குண முண்டு.
......................
ஆனால் ஐ.ஆர் ;.ஆர் .ஐ-யிலிருந்து ‘வீரிய விதைகளாக’ அறிமுகப் படுத்தப்பட்டவற்றிற்கு அப்படியொரு குறிப்பிட்ட தன்மை கிடையாது. எந்த நாட்டிற்கு அனுப்பபடுகிறதோ அந்த நாட்டுச்சூழ்நிலைக்குப் பொருந்துமா என்பது பற்றி விரிவான ஆராய்ச்சி நடத்தப்படவில்லை தவிர வெளிநாடுகளில் இது மாதிரி
......................
அரிசி குறித்து ஆராய்ச்சி நடந்த மாதிரியே இந்தியாவிலும் நடந்தது.
..................
தொடரும் (1)
திரு மணா அவர்கள் எழுதிய தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள் நூலிலிருந்து
www .vaaa .in

பெரிய பெருமாளுக்கு சதயவிழா

பெரிய பெருமாளுக்கு சதயவிழா வாழ்த்துக்கள் 
-------------------------------------------------------------------------
பாண்டியர்கள் 

சிவனின் அம்சம் 
............................
சோழர்கள்
பெருமாளின் அம்சம்
-.....................................
சோழர்களில்
இவன் பெரிய சோழன்
ஆம்
இவன் பெரிய பெருமாள் தான்
..................................
WWW.VAAA.IN
தமிழ் புத்தக விற்பனை இணையத்தளம்

ராஜாஜியின் கலைந்த கனவு

ராஜாஜியின் கலைந்த கனவு 
----------------------------------------------
இந்த கட்டுரை தொகுப்பை படித்து விட்டு ராஜாஜியின் கனவு ..புரிந்தவர்கள் கருத்துகளை பதிவு செய்யவும் 

------------------------------------------------------
ராஜாஜி பாகிஸ்தான் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
(Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி.

இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். 

இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார் WIKIPEDIA
----------------------------------------------------

1921 இல் காங்கிரஸோடு 
தன்னுடைய உறவுகளை முழுமையாக முறித்துக் கொண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவராக ஜின்னா ஆனார்.

சுயமரியாதை இயக்கத்தை அமைத்த ஈ.வெ.ரா. பெரியார் சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்று 1930 இல் கூறினார்.

இதனால் முஸ்லிம்களுக்கு ஈ.வெ.ரா. மீது ஒரு பற்று ஏற்பட்டது. இந்த உறவு 1940 இல் சீர்குலைகின்றன. சில முஸ்லிம்களுடனான கருத்து வேறுபாடால் இதுநிகழ்கிறது.

உதாரணமாக, ஈ.வெ.ரா. பெரியார் திராவிடம்தான் உயர்ந்தது என்றார். ஆனால், முஸ்லிம்களுக்கோ இஸ்லாம்தான் உயர்ந்தது என்று திராவிடத்தை விமர்சனம் செய்தனர்.

1940இல் முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் ஒரு தனி நாடு வேண்டுமெனக் கேட்டார். 

அதை ஈ.வெ.ரா. பெரியார் ஆதரித்தார்.

அதே நேரம் ஜின்னா திராவிட நாட்டை ஆதரிப்பதாக சொன்னார். பிறகு அந்தக் கோரிக்கையை ஜின்னா நிராகரித்தார்.

பெரியாரின் நாத்திக கொள்கையை மையமாகக் கொண்டு அரசியல் செய்ததால் மதத்தையே மையமாக வைத்து முஸ்லிம்கள் செயல்படுவதால் ஈ.வெ.ரா பெரியாருக்கு, 

தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் கருத்து வேறுபாடு வலுப்பெற்றது.

‘ஆகவே திராவிட நாடு கோரிக்கை என்பது உங்களுடைய பிரச்சனை. அதில் நான் தலையிட முடியாது.

மேலும் நான் முஸ்லிம்களுக்காகத்தான் பேச முடியும். திராவிடர்களுக்காக நான் பேச முடியாது’ என்று ஜின்னா சொல்லிவிட்டு ஒதுங்க ஆரம்பித்தார்.

தமிழ்நாட்டில் இருக்கிற முஸ்லிம்களும் ஈ.வெ.ரா.பெரியாரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். 

ஆனாலும் ஈ.வெ.ரா. பெரியார் தொடர்ந்து பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாகவே இருந்தார். குறிப்பாக தாருல் இஸ்லாம் என்ற பத்திரிகையை முப்பது வருஷமாக நடத்தி வந்த தாவூத் ஷா ஈ.வெ.ரா. பெரியார் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினார். இதையெல்லாம் 2004 இல் வெளிவந்த என்னுடைய புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளேன்.(எழுத்தாளர்: J.B.P.மொரே)

அகில இந்திய முஸ்லிம் லீக் என்பது ஒரு வகுப்புவாத கட்சி. ஏனெனில் அந்தக் கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இந்த வகுப்புவாத கட்சியின் தலைவர் ஜின்னா. அன்றைய இந்திய துணைக்கண்டத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 25 சதவிகிதம்தான். அப்போது முஸ்லிம்களுக்கு நாட்டில் அரசியல் மற்றும் கலாசாரரீதியாக என்ன ஆதரவு இருந்தது என்று தெரியவில்லை. பின் நாளில் அகில இந்திய முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்கள் எல்லோருக்குமான ஒரே கட்சி என்ற நிலை ஏற்பட்டது.

-------------------
1939 இரண்டாம் உலகப் போர் வெடித்தது. 
அப்போது ஜின்னா வகுப்புவாத தேசியவாதியாகத்தான் இருந்தார்.

அவர் வகுப்புவாத தேசியவாதியிலிருந்து முஸ்லிம் தேசியவாதியாகவோ அல்லது தனிநாடு கோரிக்கைவாதியாகவோ எப்படி மாறினார் என்பதுதான் ஆய்வுக்குரிய விஷயம். 

அப்போது இருந்த காங்கிரஸ் மந்திரிசபை இரண்டாம் உலகப்போரில் பங்குபெறும் பிரிட்டிஷ§க்கு ஆதரவாக இல்லை. இதனால் இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் மந்திரிசபைகள் ராஜினாமா செய்தன. இந்தச் சூழல் ஜின்னாவிற்கு வசதியாக போய்விட்டது. அப்போது ஜின்னாவிற்கு எந்த அதிகாரமும் இல்லை.

அந்தச் சமயத்தில் காங்கிரஸ் செய்த இந்தத் தவறை ஜின்னா நன்கு பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 1939 முஸ்லிம்கள் காங்கிரஸின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டார்கள் என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டன. 

தென்னிந்தியாவில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பெரியார் ஈ.வெ.ரா கலந்து கொண்டு ஜின்னாவுக்கு ஆதரவாக பேசினார்.

அப்போது பிரிட்டிஷ்காரர்களின் முக்கிய நோக்கம் இரண்டாம் உலகப்போரில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். அதற்கு யாரை, எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். 

அப்போது இருந்த இந்திய இராணுவத்தில் முஸ்லிம்கள் நாற்பது சதவிகிதத்தினரும், சீக்கியர்கள் முப்பது சதவிகிதத்தினரும் இருந்தனர். இதில் கூர்காக்களும், காஷ்மீர் டோக்கார்களும், மராட்டியர்களும் இந்துக்களாக இதர முப்பது சதவிகிதத்தில் இருந்தனர்.

1940 இல் ஜின்னா தனிநாடு கேட்கிறார். இந்த இடத்தில்தான் வகுப்புவாத தேசியவாதியாக இருந்த ஜின்னா முழுமையான முஸ்லிம் தேசியவாதியாகி இந்தியாவிலிருந்து பிரிவினை கோருபவராக மாறுகிறார்.

பிரிவினைவாத தீர்மானம் லாகூரில் முதலில் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை படித்துப் பார்த்தால்
இந்தத் துணைக் கண்டத்தில் எங்கெங்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அங்கு இஸ்லாமிய அரசு உருவாக்க வேண்டும்; 

அதாவது, இந்தியாவின் வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அதை Separate Muslim Sovereign States என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
1943 க்குள் தனிநாடு வேண்டும் என்று ஜின்னா கேட்க ஆரம்பித்தார்.

அதே நேரம் கிரிப்ஸ் தனியாக பிரிந்து போகலாம் என்று சொன்னவுடன் பஞ்சாப்பில் சீக்கியர்கள் அதிகம் இருந்தாலும் நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜின்னா விரும்பினார். இது போலவே வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாக இருந்தாலும் பாகிஸ்தானோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜின்னா கூறினார். இதோடு அசாமையும் சேர்த்துக் கொண்டார்.

ராஜாஜிக்கும், காந்திக்கும் நல்ல உறவு இருந்ததால் ராஜாஜி கொண்டு வந்த தீர்மானத்தை காந்தி பலமாக எதிர்க்கவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கம் வந்தபோது பிரிட்டிஷ்காரர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார் ராஜாஜி.

அப்படி ஆதரவாக இல்லை என்றால் ஜப்பான்காரர்கள் நம்மை ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும், நாட்டில் பெரிய குழப்பம் வந்து விடும் என்றும், அதனால் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் வேண்டாம் என்றும் காந்தியிடம் சொன்னார்.

ஆனால் ராஜாஜியின் பேச்சை காந்தி கேட்கவில்லை. அதனால் ராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பிரிட்டிசாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஏனெனில் பிரிட்டிஷ்காரர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், இந்தியா ஒற்றுமையாக இருக்க உதவுவார்கள். மேலும் ஏதாவது பிரிவினை என்று வந்தால் பெரிய பிரச்சனை ஏதுவும் இருக்காது என்று ராஜாஜி நினைத்தார்.
இந்த நேரத்தில் பிரிட்டிஷ்க்கு எதிராக காங்கிரஸ் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கமோ இந்திய ராணுவத்தைச் சார்ந்து இருந்தது. பஞ்சாபிலிருந்து பல இலட்சம் பேர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்தனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்போது ஜின்னா கேட்டதையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து கொடுத்தது. மேலும் கொடுக்கவும் தயாராக இருந்தது. அதனால் ராஜாஜி, பிரிட்டிஷ்காரர்கள் ஜின்னாவை கைவிட மாட்டார்கள் என்றார்.

இந்தியாவுக்கு எதிர்நிலையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும். இது ஜின்னா கேட்டதால் அல்ல. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிர்நிலையில் நிறுத்தப்பட வேண்டுமென்று பிரிட்டிசார் விரும்பினார்கள். இது இன்றுவரை தொடர்கிறது. பிரிட்டிசார் நினைத்த மாதிரி ‘பெரிய பாகிஸ்தானை’ கொடுக்க முடியவில்லை. ஏனெனில் ஹிந்து, சீக்கியர்கள் பெரும்பான்மையாக கிழக்கு பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்தார்கள். 

அன்றைக்கு பிரதமராக இருந்த அட்லி கடைசிவரைக்கும் வங்காளத்தை மட்டும் தனியாகப் பிரித்து, காமன்வெல்த்தில் சேர்த்து விடுவோம் என்றார். அப்போது ஜின்னா, எங்களுக்கு ‘பெரிய பாகிஸ்தான்’ கொடுத்து விடுங்கள். நாங்களும் காமன்வெல்த்தில் சேர்ந்து கொள்கிறோம் என்றார். 
-----------------------
பிரிட்டிஷ் காமன்வெல்த் என்பதே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு தந்திரம்தான்.எப்படி 
---------------------------
இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் காமன்வெல்த் உறுப்பினர்கள். காமன்வெல்த்உறுப்பினர்களாக இருந்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நலன்களை பாதுகாக்கிறார்கள். இதுவே பிரிட்டிசார் தந்திரத்தின் முழுமையான வெற்றியாகும்.

1942 ஏப்ரலில் சென்னை ராஜதானி உறுப்பினர்களை ஏற்கவைத்து முஸ்லீம் லீக் கோரிக்கையான பாகிஸ்தானை ஏற்பது என்ற நிலைப்பாட்டை ராஜாஜி எடுத்தார். ராஜாஜியின் இந்நிலைப்பாட்டை படேல் கடுமையாக ஆட்சேபித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என விமர்சித்தார். 

ஏப்ரல் இறுதியில் அகமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் ராஜாஜி நிலைப்பாட்டை நிராகரித்தது. காந்திஜி ராஜாஜியை காங்கிரசிலிருந்து விலகிவிடுமாறு அறிவுறுத்தினார். மதரீதியாக நாடு பிளவுபடுவதை காந்தி ஏற்கவில்லை. அதே நேரத்தில் ராஜாஜி வெளியிலிருந்து தனது சுதந்திர கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என காந்தி கருதினார்.

முஸ்லீம் லீகின் கோரிக்கை என்கிற யாதார்த்தம் காங்கிரஸ் தலைமையால் உணரப்படாமல் விடுதலை தள்ளிப்போகிறது என்கிற வருத்தம் ராஜாஜியிடம் இருந்தது. முஸ்லிம் லீகிடம் விலைபோய்விட்டார் என்று ராஜாஜி மீது விமர்சனம்- அவரது கூட்டங்களில் கல்வீச்சு, தக்காளி வீச்சு நடந்தன.

காந்தி மட்டும் பாகிஸ்தான் என்பதை ஏற்றுவிட்டால் பத்து நிமிடஙளில் சுய ஆட்சி பிரச்ச்னையை தீர்த்துவிடலாம் என ஜின்னா நிலைமைகளை எளிமைப்படுத்தினார். சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், வடமேற்கு மாநிலம், வங்கம், அஸ்ஸாம் என்கிற பகுதிகள் பாகிஸ்தான் என ஆகவேண்டும் என்றார் ஜின்னா.
--------------------------------------
ராஜாஜி சென்னை மாகான கவர்னராக இருந்த போது அங்கே செனட் உறுப்பினராக பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். காங்கிரஸூம் பார்வர்ட் பிளாக்கும் எதிரணியில் இருந்தன.
--------------------------------
பாகிஸ்தான் படுகொலைகள் நிகழ்ந்த பிறகு மாகான மன்றத்தில் தேவர்.,

ராஜாஜியை நோக்கி ஆவேசமாக பேசினார். தேசத்தில் பாகிஸ்தான் என்ற பரம பாதகமான நாட்டுப் பிரிவினையை உண்டுபண்ணும்படி சொன்னது தாங்கள் அல்லவா?
அப்பொழுது என்ன சொன்னீர்கள்:
'பாகிஸ்தான் என்றால் ஜின்னாவுக்கு என்னவென்றாவது தெரியுமா? 

பாகிஸ்தானை கொடுத்துவிட்டால் அதனால் நமக்கு தொல்லை இருக்காது' என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.

"Pakistan bubble will be pricked" என்று சொன்னீர்களே!
பாகிஸ்தானை கொடுத்த பிறகாவது இன்று அதனால் தொல்லையில்லாமல் இருக்கிறீர்களா?

காஷ்மீரில் இன்று நடக்கும் காரியங்கள் என்ன?
பாகிஸ்தான் கொடுத்தவுடனேயே அந்தப் பிராந்திய மக்கள், அந்தப் பிராந்தியத்திலேயே வசிப்பவர்கள் பாகிஸ்தான் பிரஜையாகி விடுவார்கள் என சொன்னீர்களே,

பாகிஸ்தான் கிடைத்தவுடனேயே ஒன்றரைக் கோடி இந்திய மக்களை அடித்துவிரட்டவில்லையா?
பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட ஒன்றரைக் கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று?

அவர்கள் நடு சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே!
சொத்தை இழந்து,வாழ்க்கை நிலைமை இழந்து , மனைவி மக்களை இழந்து அலறித்துடித்தார்களே!
அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களை பாகிஸ்தான் ஓடு என ஆச்சாரியர் கோஷ்டியால் விரட்டமுடிந்ததா?அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜையே போ" என்று சொல்ல முடிந்ததா?

ஆச்சாரியாரே! உங்களுடைய அறிவு அப்போது எப்படி ஆயிற்று?
நீங்கள் யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்? 

அவர்கள்(பாகிஸ்தான்) உங்களிடம் ஏமாந்தார்களா? கொஞ்சம் சொல்லுங்களேன். 
அரசியலுக்கு அறிவு மட்டும் இருந்தால் போதுமா? ஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா?
காந்தினுடைய தவறான மரணத்திற்கும்
தங்கள் பாகிஸ்தான் யோசனையல்லவா துராணகருவி.

((1952-ல் ஜூலை-3ல் சென்னை மகாணப் பேரவையில் ராஜாஜி கொண்டு வந்த 'நம்பிக்கை தீர்மாணத்தில் திரு.பசும்பொன் தேவர் பேசியது))
ஜஸ்வந்த்சிங்கின் ஒரு பிரிட்டிஷ் - அமெரிக்க ஏகாதிபத்திய மறைமுக சார்பு
http://keetru.com/index.php
இது பல்வேறு தளங்களில் இருந்து தொகுக்கப்பட்டது

யானைக்கட்டும் கல்


மருதத் தெய்வம் - வேந்தன்

மருதத் தெய்வம் - வேந்தன்
--------------------------------------------------- 


குமரி நாட்டு மருத நில மக்கள்
முதல் முதலாக மறுமையை கருதி (மறுபிறப்பு)
சொர்கம், நரகம் கோட்பாட்டை உருவாக்கினர் .
.
இவ்வுலகில் நன்மை செய்து வாழ்பவன் - மறு உலகில் தேவனாக பிறப்பான் என்றும் 
“ அறந்செய்து வாழும் அரசன் - தேவலோகத்தில் தேவர் கோனாய் பிறப்பான் என்ற கொள்கை உருவாகிறது 
.
வேந்தன் மேய திம்புனலுகமும் -(தொல்காப்பியன்) 
.
படை வயிரவாள்
ஊர்தி - வெள்ளை யானை 
தேவநிலையம் -கோட்டம் - கோ இல் -அரசன் மனை
- 
விண்ணுலக வேந்தன்.
மழைக்கு அதிகாரியானான் 
.
ஆண்டுத்தோறும்
மூவேந்தார் நாட்டில்
வேந்தன் விழா கொண்டாடபட்டது.
.
சிவமதமும் 
திருமால் மதமும் 
வளர்ச்சி அடைந்தபின் பின் 
வேந்தன் விழா படிபடியாக கைவிடப்பட்டது
.
வேந்தன் விழா 
இறுதியாக நடத்தி வந்தவர் புகார் சோழர்களே .
பிற்காலத்தில் அது இந்திரவிழா எனப்பட்டது .

WWW.VAAA.IN

முல்லை தெய்வம்- திருமால்

முல்லை தெய்வம்- திருமால் 
...............................................................
முல்லை நிலத்தில்
ஆடு மாடுகளுக்கு புல் வளரவும் ,

ஆயர் உணவிற்கு வானாவாரிப் பயிர் விளைவிக்கவும் .
மழை வேண்டியதாயிற்று
மழை கரிய முகிலிலின்று விழுவதால் ,
முகிலையே தெய்வமாக கொண்டு
மால் என பெயரிட்டு வணங்கினர் .
.
மால் என்ற தெய்வப் பெயர்
உலக வழக்கில் என்றும்
திருமால் என்று அடை பெற்றே வழங்கும் .
..
மாலை மாயோன் என்னும் சொல்லாலும் குறிப்பது இலக்கிய வழக்காகும் .
.
மாயன் , மாயவன் என்பன மாயோன் என்பதன் மாரு வடிவங்கள்
.
மால் -மா-மாயோன் -கரியவன்
.
"மால்கடல் " ( பெரும்பா-16) பொருள் -கருங்கடல்
.
WWW.VAAA.IN

குறிஞ்சித்தெய்வம் -முருகன்

குறிஞ்சித்தெய்வம் -முருகன் 
-----------------------------------------
குறிஞ்சி நிலம் மழையும் மலை சார்ந்த யிடமும் 

(குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் )

குறிஞ்சி மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டு சேந்தன் (சிவந்தவன் ) என்று வணங்கினர்.
-
வேட்டைத் தொழில் குறவர்கள்
மறஞ் செறிந்திருத்த காரணத்தால் தம் தெய்வத்தையும் மறவனாக கருதி அவனை முருகன் (இளைஞன்) என்றனர் .
-
இளைமையில் அழகு இருப்பதால் அழகன் ,இளைஞன் என்ற பொருளில் முருகன் என்றனர் .
-
குமரன் என்ற பெயரும் இளைஞன் என்ற பெயரே
-.
குறிஞ்சி நிலத்தில் பூக்கும் கடம்ப மலரை அணிவித்ததால் கடம்பன் என்றனர் .
-
வேலை படைக்கருவியாக்கியதால்
வேலன் என்று அழைக்கப்பட்டான்
-
முருகன் உருவம் பதித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்று பெயர் .
-
குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை ஊர்த்தியாகக் கொண்டதால் அவன் மயிலேறும் பெருமாள் எனப்பட்டான்
.-
போர் மறஞ் செறிந்த சேவல் அவன் கொடியாயிற்று .
குறிஞ்சி நிலத் தலைவி கொடிச்சி எனப்பட்டதால் முருகனின் தேவி வள்ளி(கொடி ) எனப்பட்டாள்.
-
தேனும் ,தினைமாவும் ,கள்ளும் ,இறைச்சியும் தொண்டகப் பறை அறைந்து படைக்கப்பட்டன .
முருக தெய்வமேறி ஆடுபவன் வேலேந்தியதால் வேலன் எனப்பட்டான் .
அவன் கள்ளுண்டு ஆடிய ஆட்டு வெறியாட்டு எனப்பட்டது.
முருகன் கோவில்களில் காவடி எடுத்தல் அவன் அடியார்களுக்கேயான சிறப்பான நேர்த்திக்கடன்

-பாவாணர் எழுதிய தமிழர் மதம் நூலிலிருந்து
www.vaaa.in

பாராட்டு தெய்வம்

பாராட்டு தெய்வம் 
-----------------------------
மாடன் ,கருப்பண்ணன் 

முதலிய நடுகல் தெய்வங்களும்
கண்ணகி ,ஒச்சாண்டம்மை முதலிய பத்தினி தெய்வங்களும் பாராட்டு தெய்வங்கள்
----------------------தமிழர் மதம் பாவாணர்
-------------------------------------------------------------------
குலா தெய்வ வழிபாடு அவர் அவர் முன்னோர்களை வழிபடுவது
அதை 
இந்து சமயதுக்கு உட்படுத்துவது தவறான ஒன்றாகும்

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...