Tuesday, 5 December 2017

ராஜாஜியின் கலைந்த கனவு

ராஜாஜியின் கலைந்த கனவு 
----------------------------------------------
இந்த கட்டுரை தொகுப்பை படித்து விட்டு ராஜாஜியின் கனவு ..புரிந்தவர்கள் கருத்துகளை பதிவு செய்யவும் 

------------------------------------------------------
ராஜாஜி பாகிஸ்தான் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
(Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி.

இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். 

இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார் WIKIPEDIA
----------------------------------------------------

1921 இல் காங்கிரஸோடு 
தன்னுடைய உறவுகளை முழுமையாக முறித்துக் கொண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவராக ஜின்னா ஆனார்.

சுயமரியாதை இயக்கத்தை அமைத்த ஈ.வெ.ரா. பெரியார் சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்று 1930 இல் கூறினார்.

இதனால் முஸ்லிம்களுக்கு ஈ.வெ.ரா. மீது ஒரு பற்று ஏற்பட்டது. இந்த உறவு 1940 இல் சீர்குலைகின்றன. சில முஸ்லிம்களுடனான கருத்து வேறுபாடால் இதுநிகழ்கிறது.

உதாரணமாக, ஈ.வெ.ரா. பெரியார் திராவிடம்தான் உயர்ந்தது என்றார். ஆனால், முஸ்லிம்களுக்கோ இஸ்லாம்தான் உயர்ந்தது என்று திராவிடத்தை விமர்சனம் செய்தனர்.

1940இல் முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் ஒரு தனி நாடு வேண்டுமெனக் கேட்டார். 

அதை ஈ.வெ.ரா. பெரியார் ஆதரித்தார்.

அதே நேரம் ஜின்னா திராவிட நாட்டை ஆதரிப்பதாக சொன்னார். பிறகு அந்தக் கோரிக்கையை ஜின்னா நிராகரித்தார்.

பெரியாரின் நாத்திக கொள்கையை மையமாகக் கொண்டு அரசியல் செய்ததால் மதத்தையே மையமாக வைத்து முஸ்லிம்கள் செயல்படுவதால் ஈ.வெ.ரா பெரியாருக்கு, 

தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் கருத்து வேறுபாடு வலுப்பெற்றது.

‘ஆகவே திராவிட நாடு கோரிக்கை என்பது உங்களுடைய பிரச்சனை. அதில் நான் தலையிட முடியாது.

மேலும் நான் முஸ்லிம்களுக்காகத்தான் பேச முடியும். திராவிடர்களுக்காக நான் பேச முடியாது’ என்று ஜின்னா சொல்லிவிட்டு ஒதுங்க ஆரம்பித்தார்.

தமிழ்நாட்டில் இருக்கிற முஸ்லிம்களும் ஈ.வெ.ரா.பெரியாரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். 

ஆனாலும் ஈ.வெ.ரா. பெரியார் தொடர்ந்து பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாகவே இருந்தார். குறிப்பாக தாருல் இஸ்லாம் என்ற பத்திரிகையை முப்பது வருஷமாக நடத்தி வந்த தாவூத் ஷா ஈ.வெ.ரா. பெரியார் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினார். இதையெல்லாம் 2004 இல் வெளிவந்த என்னுடைய புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளேன்.(எழுத்தாளர்: J.B.P.மொரே)

அகில இந்திய முஸ்லிம் லீக் என்பது ஒரு வகுப்புவாத கட்சி. ஏனெனில் அந்தக் கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இந்த வகுப்புவாத கட்சியின் தலைவர் ஜின்னா. அன்றைய இந்திய துணைக்கண்டத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 25 சதவிகிதம்தான். அப்போது முஸ்லிம்களுக்கு நாட்டில் அரசியல் மற்றும் கலாசாரரீதியாக என்ன ஆதரவு இருந்தது என்று தெரியவில்லை. பின் நாளில் அகில இந்திய முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்கள் எல்லோருக்குமான ஒரே கட்சி என்ற நிலை ஏற்பட்டது.

-------------------
1939 இரண்டாம் உலகப் போர் வெடித்தது. 
அப்போது ஜின்னா வகுப்புவாத தேசியவாதியாகத்தான் இருந்தார்.

அவர் வகுப்புவாத தேசியவாதியிலிருந்து முஸ்லிம் தேசியவாதியாகவோ அல்லது தனிநாடு கோரிக்கைவாதியாகவோ எப்படி மாறினார் என்பதுதான் ஆய்வுக்குரிய விஷயம். 

அப்போது இருந்த காங்கிரஸ் மந்திரிசபை இரண்டாம் உலகப்போரில் பங்குபெறும் பிரிட்டிஷ§க்கு ஆதரவாக இல்லை. இதனால் இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் மந்திரிசபைகள் ராஜினாமா செய்தன. இந்தச் சூழல் ஜின்னாவிற்கு வசதியாக போய்விட்டது. அப்போது ஜின்னாவிற்கு எந்த அதிகாரமும் இல்லை.

அந்தச் சமயத்தில் காங்கிரஸ் செய்த இந்தத் தவறை ஜின்னா நன்கு பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 1939 முஸ்லிம்கள் காங்கிரஸின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டார்கள் என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டன. 

தென்னிந்தியாவில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பெரியார் ஈ.வெ.ரா கலந்து கொண்டு ஜின்னாவுக்கு ஆதரவாக பேசினார்.

அப்போது பிரிட்டிஷ்காரர்களின் முக்கிய நோக்கம் இரண்டாம் உலகப்போரில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். அதற்கு யாரை, எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். 

அப்போது இருந்த இந்திய இராணுவத்தில் முஸ்லிம்கள் நாற்பது சதவிகிதத்தினரும், சீக்கியர்கள் முப்பது சதவிகிதத்தினரும் இருந்தனர். இதில் கூர்காக்களும், காஷ்மீர் டோக்கார்களும், மராட்டியர்களும் இந்துக்களாக இதர முப்பது சதவிகிதத்தில் இருந்தனர்.

1940 இல் ஜின்னா தனிநாடு கேட்கிறார். இந்த இடத்தில்தான் வகுப்புவாத தேசியவாதியாக இருந்த ஜின்னா முழுமையான முஸ்லிம் தேசியவாதியாகி இந்தியாவிலிருந்து பிரிவினை கோருபவராக மாறுகிறார்.

பிரிவினைவாத தீர்மானம் லாகூரில் முதலில் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை படித்துப் பார்த்தால்
இந்தத் துணைக் கண்டத்தில் எங்கெங்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அங்கு இஸ்லாமிய அரசு உருவாக்க வேண்டும்; 

அதாவது, இந்தியாவின் வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அதை Separate Muslim Sovereign States என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
1943 க்குள் தனிநாடு வேண்டும் என்று ஜின்னா கேட்க ஆரம்பித்தார்.

அதே நேரம் கிரிப்ஸ் தனியாக பிரிந்து போகலாம் என்று சொன்னவுடன் பஞ்சாப்பில் சீக்கியர்கள் அதிகம் இருந்தாலும் நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜின்னா விரும்பினார். இது போலவே வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாக இருந்தாலும் பாகிஸ்தானோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜின்னா கூறினார். இதோடு அசாமையும் சேர்த்துக் கொண்டார்.

ராஜாஜிக்கும், காந்திக்கும் நல்ல உறவு இருந்ததால் ராஜாஜி கொண்டு வந்த தீர்மானத்தை காந்தி பலமாக எதிர்க்கவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கம் வந்தபோது பிரிட்டிஷ்காரர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார் ராஜாஜி.

அப்படி ஆதரவாக இல்லை என்றால் ஜப்பான்காரர்கள் நம்மை ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும், நாட்டில் பெரிய குழப்பம் வந்து விடும் என்றும், அதனால் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் வேண்டாம் என்றும் காந்தியிடம் சொன்னார்.

ஆனால் ராஜாஜியின் பேச்சை காந்தி கேட்கவில்லை. அதனால் ராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பிரிட்டிசாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஏனெனில் பிரிட்டிஷ்காரர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், இந்தியா ஒற்றுமையாக இருக்க உதவுவார்கள். மேலும் ஏதாவது பிரிவினை என்று வந்தால் பெரிய பிரச்சனை ஏதுவும் இருக்காது என்று ராஜாஜி நினைத்தார்.
இந்த நேரத்தில் பிரிட்டிஷ்க்கு எதிராக காங்கிரஸ் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கமோ இந்திய ராணுவத்தைச் சார்ந்து இருந்தது. பஞ்சாபிலிருந்து பல இலட்சம் பேர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்தனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்போது ஜின்னா கேட்டதையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து கொடுத்தது. மேலும் கொடுக்கவும் தயாராக இருந்தது. அதனால் ராஜாஜி, பிரிட்டிஷ்காரர்கள் ஜின்னாவை கைவிட மாட்டார்கள் என்றார்.

இந்தியாவுக்கு எதிர்நிலையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும். இது ஜின்னா கேட்டதால் அல்ல. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிர்நிலையில் நிறுத்தப்பட வேண்டுமென்று பிரிட்டிசார் விரும்பினார்கள். இது இன்றுவரை தொடர்கிறது. பிரிட்டிசார் நினைத்த மாதிரி ‘பெரிய பாகிஸ்தானை’ கொடுக்க முடியவில்லை. ஏனெனில் ஹிந்து, சீக்கியர்கள் பெரும்பான்மையாக கிழக்கு பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்தார்கள். 

அன்றைக்கு பிரதமராக இருந்த அட்லி கடைசிவரைக்கும் வங்காளத்தை மட்டும் தனியாகப் பிரித்து, காமன்வெல்த்தில் சேர்த்து விடுவோம் என்றார். அப்போது ஜின்னா, எங்களுக்கு ‘பெரிய பாகிஸ்தான்’ கொடுத்து விடுங்கள். நாங்களும் காமன்வெல்த்தில் சேர்ந்து கொள்கிறோம் என்றார். 
-----------------------
பிரிட்டிஷ் காமன்வெல்த் என்பதே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு தந்திரம்தான்.எப்படி 
---------------------------
இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் காமன்வெல்த் உறுப்பினர்கள். காமன்வெல்த்உறுப்பினர்களாக இருந்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நலன்களை பாதுகாக்கிறார்கள். இதுவே பிரிட்டிசார் தந்திரத்தின் முழுமையான வெற்றியாகும்.

1942 ஏப்ரலில் சென்னை ராஜதானி உறுப்பினர்களை ஏற்கவைத்து முஸ்லீம் லீக் கோரிக்கையான பாகிஸ்தானை ஏற்பது என்ற நிலைப்பாட்டை ராஜாஜி எடுத்தார். ராஜாஜியின் இந்நிலைப்பாட்டை படேல் கடுமையாக ஆட்சேபித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என விமர்சித்தார். 

ஏப்ரல் இறுதியில் அகமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் ராஜாஜி நிலைப்பாட்டை நிராகரித்தது. காந்திஜி ராஜாஜியை காங்கிரசிலிருந்து விலகிவிடுமாறு அறிவுறுத்தினார். மதரீதியாக நாடு பிளவுபடுவதை காந்தி ஏற்கவில்லை. அதே நேரத்தில் ராஜாஜி வெளியிலிருந்து தனது சுதந்திர கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என காந்தி கருதினார்.

முஸ்லீம் லீகின் கோரிக்கை என்கிற யாதார்த்தம் காங்கிரஸ் தலைமையால் உணரப்படாமல் விடுதலை தள்ளிப்போகிறது என்கிற வருத்தம் ராஜாஜியிடம் இருந்தது. முஸ்லிம் லீகிடம் விலைபோய்விட்டார் என்று ராஜாஜி மீது விமர்சனம்- அவரது கூட்டங்களில் கல்வீச்சு, தக்காளி வீச்சு நடந்தன.

காந்தி மட்டும் பாகிஸ்தான் என்பதை ஏற்றுவிட்டால் பத்து நிமிடஙளில் சுய ஆட்சி பிரச்ச்னையை தீர்த்துவிடலாம் என ஜின்னா நிலைமைகளை எளிமைப்படுத்தினார். சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், வடமேற்கு மாநிலம், வங்கம், அஸ்ஸாம் என்கிற பகுதிகள் பாகிஸ்தான் என ஆகவேண்டும் என்றார் ஜின்னா.
--------------------------------------
ராஜாஜி சென்னை மாகான கவர்னராக இருந்த போது அங்கே செனட் உறுப்பினராக பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். காங்கிரஸூம் பார்வர்ட் பிளாக்கும் எதிரணியில் இருந்தன.
--------------------------------
பாகிஸ்தான் படுகொலைகள் நிகழ்ந்த பிறகு மாகான மன்றத்தில் தேவர்.,

ராஜாஜியை நோக்கி ஆவேசமாக பேசினார். தேசத்தில் பாகிஸ்தான் என்ற பரம பாதகமான நாட்டுப் பிரிவினையை உண்டுபண்ணும்படி சொன்னது தாங்கள் அல்லவா?
அப்பொழுது என்ன சொன்னீர்கள்:
'பாகிஸ்தான் என்றால் ஜின்னாவுக்கு என்னவென்றாவது தெரியுமா? 

பாகிஸ்தானை கொடுத்துவிட்டால் அதனால் நமக்கு தொல்லை இருக்காது' என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.

"Pakistan bubble will be pricked" என்று சொன்னீர்களே!
பாகிஸ்தானை கொடுத்த பிறகாவது இன்று அதனால் தொல்லையில்லாமல் இருக்கிறீர்களா?

காஷ்மீரில் இன்று நடக்கும் காரியங்கள் என்ன?
பாகிஸ்தான் கொடுத்தவுடனேயே அந்தப் பிராந்திய மக்கள், அந்தப் பிராந்தியத்திலேயே வசிப்பவர்கள் பாகிஸ்தான் பிரஜையாகி விடுவார்கள் என சொன்னீர்களே,

பாகிஸ்தான் கிடைத்தவுடனேயே ஒன்றரைக் கோடி இந்திய மக்களை அடித்துவிரட்டவில்லையா?
பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட ஒன்றரைக் கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று?

அவர்கள் நடு சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே!
சொத்தை இழந்து,வாழ்க்கை நிலைமை இழந்து , மனைவி மக்களை இழந்து அலறித்துடித்தார்களே!
அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களை பாகிஸ்தான் ஓடு என ஆச்சாரியர் கோஷ்டியால் விரட்டமுடிந்ததா?அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜையே போ" என்று சொல்ல முடிந்ததா?

ஆச்சாரியாரே! உங்களுடைய அறிவு அப்போது எப்படி ஆயிற்று?
நீங்கள் யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்? 

அவர்கள்(பாகிஸ்தான்) உங்களிடம் ஏமாந்தார்களா? கொஞ்சம் சொல்லுங்களேன். 
அரசியலுக்கு அறிவு மட்டும் இருந்தால் போதுமா? ஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா?
காந்தினுடைய தவறான மரணத்திற்கும்
தங்கள் பாகிஸ்தான் யோசனையல்லவா துராணகருவி.

((1952-ல் ஜூலை-3ல் சென்னை மகாணப் பேரவையில் ராஜாஜி கொண்டு வந்த 'நம்பிக்கை தீர்மாணத்தில் திரு.பசும்பொன் தேவர் பேசியது))
ஜஸ்வந்த்சிங்கின் ஒரு பிரிட்டிஷ் - அமெரிக்க ஏகாதிபத்திய மறைமுக சார்பு
http://keetru.com/index.php
இது பல்வேறு தளங்களில் இருந்து தொகுக்கப்பட்டது

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...