Tuesday, 5 December 2017

குறிஞ்சித்தெய்வம் -முருகன்

குறிஞ்சித்தெய்வம் -முருகன் 
-----------------------------------------
குறிஞ்சி நிலம் மழையும் மலை சார்ந்த யிடமும் 

(குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் )

குறிஞ்சி மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டு சேந்தன் (சிவந்தவன் ) என்று வணங்கினர்.
-
வேட்டைத் தொழில் குறவர்கள்
மறஞ் செறிந்திருத்த காரணத்தால் தம் தெய்வத்தையும் மறவனாக கருதி அவனை முருகன் (இளைஞன்) என்றனர் .
-
இளைமையில் அழகு இருப்பதால் அழகன் ,இளைஞன் என்ற பொருளில் முருகன் என்றனர் .
-
குமரன் என்ற பெயரும் இளைஞன் என்ற பெயரே
-.
குறிஞ்சி நிலத்தில் பூக்கும் கடம்ப மலரை அணிவித்ததால் கடம்பன் என்றனர் .
-
வேலை படைக்கருவியாக்கியதால்
வேலன் என்று அழைக்கப்பட்டான்
-
முருகன் உருவம் பதித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்று பெயர் .
-
குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை ஊர்த்தியாகக் கொண்டதால் அவன் மயிலேறும் பெருமாள் எனப்பட்டான்
.-
போர் மறஞ் செறிந்த சேவல் அவன் கொடியாயிற்று .
குறிஞ்சி நிலத் தலைவி கொடிச்சி எனப்பட்டதால் முருகனின் தேவி வள்ளி(கொடி ) எனப்பட்டாள்.
-
தேனும் ,தினைமாவும் ,கள்ளும் ,இறைச்சியும் தொண்டகப் பறை அறைந்து படைக்கப்பட்டன .
முருக தெய்வமேறி ஆடுபவன் வேலேந்தியதால் வேலன் எனப்பட்டான் .
அவன் கள்ளுண்டு ஆடிய ஆட்டு வெறியாட்டு எனப்பட்டது.
முருகன் கோவில்களில் காவடி எடுத்தல் அவன் அடியார்களுக்கேயான சிறப்பான நேர்த்திக்கடன்

-பாவாணர் எழுதிய தமிழர் மதம் நூலிலிருந்து
www.vaaa.in

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...