Tuesday, 5 December 2017

பசுமைப் புரட்சி

பசுமைப் புரட்சி 
-------------------------
இந்தியாவில் 1967-ல் நுழைந்தது.

.....
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஆர் ;.ஆர் ;.ஐ.) மூலமாக அமுல்படுத்தப்பட்ட திட்டம்தான் பசுமைப் புரட்சித் திட்டம். 
................
ஐ.ஆர் ;.ஆர் ;.ஐ. என்கிற இந்த அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பற்றி முதலில் பார்க்கலாம்.
...
சர்வதேச விவசாய ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழ (சி.ஜி .ஐ.ஏ.ஆர்  என்று நியுயார்க்கில் ஒரு ஏஜென்ஸி. இதற்கும் உலக வங்கிக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இந்த நிறுவனத்திற்கு - அதாவது ஒரு வருஷத்திற்கு ஏறத்தாழ 140 மில்லியன் டாலா; வரை பட்ஜெட் வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் கீழ் 13 நாடுகளில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்குகின்றன.
..................
இதில் ஓன்றுதான் ஐ.ஆர் .ஆர் ;.ஐ என்கிற மணிலாவில் உள்ள
சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்
...................
இதன் பின்னணியில் இருப்பது ராக்பெல்லரின் போர்டு நிறுவனம் இந்த இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளை வரவழைத்துப் பல்வேறு நாடுகளில் உள்ள பல ரகமான நெல் விதைகளையெல்லம் சேகரித்து இங்கு ஆய்வு நடத்திறதன் பலனாக. ‘ வீரிய விதைகள் ‘ என்று புதுவிதமாக நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தியது. ஐ.ஆர் ,ஆர் ;ஐ. என்கிற இந்த நிறுவனத்தின் முதல்
இரண்டெழு த்தைக் குறிக்கும்)
........................
வீரிய விதைகளை அறிமுகப்படுத்தினால் விளைச்சல் அதிகாரிக்கும் என்று சொல்லப்படுகிறபோது இதனால் என்ன பிரச்சனை என்று பலர் கேட்கலாம் இங்குதான் பிரச்சனை பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்து நெல் விதைகள் சேகரிக்கப்பட்டு அங்கு ஆய்வு நடத்தி புது ரகக் கண்டுபிடிப்புகளாக நெல் விதைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் வெவ்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளுக்கு அந்தந்த நாட்டின் மண் வளத்திற்கேற்ற சீதோஷ்ணத்திற்கேற்ற குண முண்டு.
......................
ஆனால் ஐ.ஆர் ;.ஆர் .ஐ-யிலிருந்து ‘வீரிய விதைகளாக’ அறிமுகப் படுத்தப்பட்டவற்றிற்கு அப்படியொரு குறிப்பிட்ட தன்மை கிடையாது. எந்த நாட்டிற்கு அனுப்பபடுகிறதோ அந்த நாட்டுச்சூழ்நிலைக்குப் பொருந்துமா என்பது பற்றி விரிவான ஆராய்ச்சி நடத்தப்படவில்லை தவிர வெளிநாடுகளில் இது மாதிரி
......................
அரிசி குறித்து ஆராய்ச்சி நடந்த மாதிரியே இந்தியாவிலும் நடந்தது.
..................
தொடரும் (1)
திரு மணா அவர்கள் எழுதிய தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள் நூலிலிருந்து
www .vaaa .in

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...