கர்நாடக மலைப்பகுதிகள்
-----------------------------------------
கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும்
கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது
.தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன.
இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில
கோதாவரி,
கிருஷ்ணா,
காவிரி
மற்றும் தாமிரபரணி
*****************************************************************
காவிரி ஆறு
------------------
காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.
கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்
*****************************************************************
காவிரி நீர் குறைவுக்கு காரணம்
--------------------------------------------------
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதில்
ஆக்ரமிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது ..
என்ன விதமான ஆக்ரமிப்பு ?
வெள்ளையர் காலத்திலிருந்து
மலை மக்களை துரத்துவது .
அவர்கள் இடங்களை ஆக்கிரமிப்பது ,
காடுகளை அழிப்பது என ஆரம்பித்து வைத்தார்கள் .
இன்று அது பெருகி
கிட்டத்தட்ட மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் ...
டீ , காபி எஸ்டேட் உருவாக்குவது ,
உல்லாச விடுதிகள் உருவாக்குவது
காகித ஆலைகளுக்கான மரங்கள் வளர்ப்பது ,கனிமங்களை வெட்டி எடுப்பது என
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும்
கிட்டத்தட்ட அதன் பகுதிகள் அதன் இயற்க்கை தன்மை குலைக்கப்பட்டுவிட்டன..
இன்று தண்ணீர் தர முடியாது
என மறுக்கும் கர்நாடகம்
நாளை அதற்க்கே
காவேரி தண்ணீர் இல்லாமல் தவிக்க போகிறது
-------------------------------------------------------------------------
கீழ் கண்ட சில இணைய குறிப்புகளை பார்க்கவும் ...
***************************************************************
1- கஸ்தூரிரங்கன் அறிக்கை:
மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு பற்றிய கஸ்தூரிரங்கன் அறிக்கையில் மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களுக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் கட்டக்கூடாது போன்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன தமிழ்நாட்டு மலை பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன .
---------------------------------------------------------------------------------
.
2-சிக்கமகளூருவை காபி நாடு என்றும் அழைப்பர்
* குடகு மாவட்டத்தை ஆரஞ்சு மாவட்டம் என்று அழைப்பர்
--------------------------------------------------------------------------------
3- ஒரு விளம்பரம்
------------------------------
மலைப்பகுதியில் பண்ணை வீடு வாங்க வேண்டுமா?
பெங்களூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணை வீடு வாங்க நினைக்கிறீர்களா?
நீங்கள் தேடும் வீடு கிடைத்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்புர் என்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணை வீடுகளை விற்பனை செய்கிறது ------- நிறுவனம்.