திருஓணம் திருநாள் வாழ்த்துக்கள்...
தமிழகத்தில் கொண்டாடப்பட்ட திருவோணம் திருநாள்
----------------------------------------------------------------------------
சங்க கால நூல் மதுரைக்காஞ்சி இவ்விழா மதுரையில் எவ்வாறு கொண்டாடப் பட்டதென அழகுற விவரிக்கிறது…!

தங்களுடைய மன்னனான மாவலியை மறவாத சேர நாட்டு மக்களுக்கும்
தமிழகத்தில் சேதிநாட்டு தலைநகரான திருக்கோவிலூரில் கோவில் கொண்டிருக்கும் உலகளந்த பெருமாளை
வணங்கும் மக்களுக்கும்
-------------------------------------------
ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.----------------------------------------------

மாவேலி மன்னன் நாடு காண வரும் இந்த திருவிழா அத்தம் தொடங்கி பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்…
மலையாள மங்கைகள் கைக்கொட்டி ஆடும் திருவாதிரை நடனமும் ,
புலிக்களியும்,
செண்டை மேளமும் கண்களில் நிறையும்…!
--------------------------------------------------------------------------------------
இவ்விழாவை ஒரு அன்னியமாக பார்க்கவேண்டியதில்லை…இதுவும் ஒரு தமிழர் விழாவே..
--------------------------------------------------------------------------------------
சங்க கால நூல் மதுரைக்காஞ்சி இவ்விழா மதுரையில் எவ்வாறு கொண்டாடப் பட்டதென அழகுற விவரிக்கிறது…!
--------------------------------------------------------------------------------------
இவ்விழாவை ஒரு அன்னியமாக பார்க்கவேண்டியதில்லை…இதுவும் ஒரு தமிழர் விழாவே..
--------------------------------------------------------------------------------------
சங்க கால நூல் மதுரைக்காஞ்சி இவ்விழா மதுரையில் எவ்வாறு கொண்டாடப் பட்டதென அழகுற விவரிக்கிறது…!
--------------------------------------------------------------------------------------
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் மாங்குடி மருதனார் பாடியது…
“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்
மாறாது உற்ற வடுப் படு நெற்றி
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…”
--------------------------------------------------------------------------------------
ஓணத் திருநாளை மறவர்கள் பெரிய விழாவாகக் கொண்டாடுவார்கள்.
அடிக்கடி போர் செய்வதால்
அவர்களுடைய உள்ளங்கையில் ஆயுதங்களின் தழும்புகள் விழுந்திருக்கும்.
ஓணம் மாயோனான திருமாலிற்கு எடுக்கும் முக்கிய விழா…!
--------------------------------------------------------------------------------------
அவர்களுடைய யானைகளும் வீரம் செறிந்தவைதான்.
அவற்றின் முகத்தில் அங்குசம் குத்திக் குத்தி வடு விழுந்திருக்கும்,
எதிரியின் யானைகளோடு கடுமையாக முட்டி மோதுவதால்
அவற்றின் தந்தங்கள் இந்த யானைகளின் நெற்றியில் வடுவாகப் பதிந்திருக்கும்.
ஓணத் திருநாளன்று மறவர்கள் தங்களுடைய பெரிய யானைகளை மோதவிடுவார்கள்.
இந்த யானை அணிவகுப்பையும் மோதலையும் மக்கள் கண்டு இன்புறுவர்…
-------------------------------------------------------------------------------------
-இவ்வாறு ஓணம் நாளன்று நம் தமிழர்கள் மற விளையாட்டுகளை நடத்தி மகிழ்ந்துள்ளனர்
என்பதை மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.
WWW.VAAA.IN
தமிழ் நூலகள் விற்பனை இணையம்
தமிழ் நூலகள் விற்பனை இணையம்
No comments:
Post a Comment