எத்தனால்
மேலை நாடுகளில் -85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை E85 என்று சந்தையில் விற்கிறார்கள்.
இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனாலையும் கலந்து விற்க இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது
ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது
எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும்
பெட்ரோலின் விலையில் 4ல் 1 பங்கு விலைக்கு எத்தனால் கிடைக்கும் என்பதால் பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறையும். கச்சா எண்ணை இறக்குமதி பெரும் அளவில் குறையும்.இதனால் பெரும் அளவில் டாலர் – அந்நியச் செலாவணி மிச்சமாகும். டாலர் கையிருப்பு அதிகம் ஆவதால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.
எத்தனாலை தவிர வேறு எதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்காது. எத்தனால் தயாராவது எப்படி: கரும்பு சாறுடன் சாக்ரோமைசிஸ் செர்வேசியே என்ற ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இந்த நுண்ணுயிரி தான் எத்தனால் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மொலாசஸிஸ் இருந்து 97 சதவீதம் தூய எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் பயன்பாடு மூலம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 25 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம். அதிகபட்சம் ரூ.30க்கு ஒரு லிட்டர் எத்தனாலை வாங்க முடியும். இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார் இஞ்சின்களில் 25 சதவீதம் எத்தனாலை பயன்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகிறது.
பிரேசிலில் 85 சதவீதம் எத்தனால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கனடா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன.
இதுவரை இந்தியாவில் *******
மாற்று தீர்வு எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டும் தான். இந்தாண்டின் துவக்கத்தில் சர்க்கரை ஆலைகளில் 5 சதவீதம் மட்டும் எத்தனால் எரிபொருள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.
இந்தியாவில் கரும்பு உற்பத்தி அதிகம். தமிழகத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது.
சர்க்கரை ஆலைகளில் 20 ஆயிரம் விவசாயிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசு மொத்தம் 9 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அங்கு தயாரிக்கப்படும் . 313 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக எத்தனால் தயாரிக்கலாம்.
ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம்.
சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்கவும், சர்க்கரை ஆலைகள் தொய்வின்றி இயங்குவதற்கும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பது சாதகமாக அமையும்.
சர்க்கரை ஆலைகளில் கரும்பைப் பிழியும்போது, கரும்புச் சாறுடன் துணைப் பொருளாகக் கிடைப்பது எத்தனால். மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்கூட இதைப் பயன்படுத்துகின்றன. பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பது பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதற்கான முக்கியக் காரணம், அதன் விலையை நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பம்தான். இதன் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விலை கேட்கின்றன. பெட்ரோல் நிறுவனங்கள் அந்த விலையை ஏற்க மறுக்கின்றன.
வீட்டில் எரிபொருள் தாயாரிக்கும் எந்திரம்
வீட்டிலேயே எத்தனால் தயாரிக்க........!
வீட்டிலேயே எத்தனால் தயாரிக்க இயந்திரம் தயார்! சட்டம் தயாரா?
மாற்று எரிபொருளான எத்தனாலை வீட்டிலிருந்தே தயாரிக்க புதிய கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறது கலிஃபோர்னிய நிறுவனம் ஒன்று இந்த எரிபொருள் நிலையத்தில் இனி வாகனங்களிற்கான எரிபொருளுக்காக முண்டியடிக்க வேண்டியதில்லை.
ஒரு கூசா(ஜா) சர்க்கரை போதும், வீட்டிலேயே வாகனங்களிற்கான மாற்றான எரிபொருள் தயாரித்து, அதைக்கொண்டு வாகனம் ஓட்ட முடியும். கேட்கவே இனிக்கிறதா?
இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இ-ஃப்யூல் நிறுவனம். அதற்கு முன் ஒரு சிறிய ஃபிளாசு(ஷ்)பேக்(Flashback)... 1980களில் அமெரிக்காவில் மக்கள் பலர் வீட்டிலேயே எத்தனால் தயாரித்து அதன் மூலம் கார் ஓட்டினர்.
இந்த முறைக்குப் பெயர் நிலவொளி முறை (Moonshine). நிலவொளிமுறை (Moonshine) ஒரு பாட்டிலில் தேவையான அளவு சர்க்கரையை எடுத்துக் கொண்டு, அதில் நான்கிற்கு ஒரு பங்கு சாராயம், ரோட்டி முதலியவற்றை புளிக்க வைக்கும் காடி சத்து (Yeast) சேர்த்து பின் அதனை நீரால் நிரப்பி கலனை மூடி நன்றாக நுரை பொங்குமளவு குலுக்க வேண்டும்.
குலுக்கிய பாட்டிலை சில நாட்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சில நாட்கள் கழித்து அந்த பாட்டிலைத் திறந்து பார்த்தால் அது எத்தனாலாய் மாறியிருக்கும். இதுவே நிலவொளிமுறை என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது.
இந்தக் கலவை விகிதத்தை சரியான அளவில் அமைத்தால் மட்டுமே முறையான எத்தனாலை பெறமுடியும். இல்லையென்றால் எசகுபிசகாகி புவி வெப்பமயமாதலுக்கு இது வழிகோலும் என்பது வல்லுநர்கள் குற்றச்சாட்டு. அதனால் இந்த நிலவொளிமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்று சொல்லித் தடைவிதிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பழைய முறையையே மேம்படுத்தி அதனை ஒரு தொழில்நுட்பமாக்கியிருக்கிறது கலிஃபோர்னிய நிறுவனம்.
இந்த முறையில் எத்தனாலை தயாரிப்பதற்கென்றே பிரத்யேகக் கருவி ஒன்றையும் வடிவமைத்திருக்கிறார்கள். அந்தக் கருவியின் பெயர் நுண் எரிகலன் (E-Fuel 100 Microfueler).
இது எப்படி வேலை செய்கிறது? "சும்மா துணி துவைக்கும் இயந்திரம் திறப்பதுபோல திறங்கள். உள்ளே சர்க்கரையைக் கொட்டுங்கள். கதவை மூடி பொத்தானை அழுத்தினால் முடிந்தது வேலை. சில நாட்களில் எத்தனால் தயாராகும்" என்று ஏதோ தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவதைப்போல சொல்கிறார் இ-ஃப்யூல் நிறுவனர் டாம் க்யுன்.
இருநூறு இறாத்தல் எடை கொண்ட இந்த எந்திரம், எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் கருவிக்கும் வங்கியின் தானியங்கியாக பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் இயந்திரம் (Automated Teller Machine) பிறந்த மாதிரி இருக்கிறது. சர்க்கரை, தண்ணீர், தேவையான அளவு சாராயம், ரோட்டி முதலியவற்றை புளிக்க வைக்கும் காடி சத்து ஆகியவற்றை இந்த இயந்திரத்தில் போட்டுவிட்டால் போதும், ஏழே நாட்களில் 35 கேலன்களில் எத்தனாலை கொடுக்கிறது.
ஒரு கேலன் என்பது மூன்றரை லிட்டருக்குச் சமம். ஒரு கேலன் எத்தனால் தயாரிக்க 40 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகிறது. தயாரான எத்தனாலை காரில் செலுத்த இந்த இயந்த்ரத்தில் ஒரு குழாய் தனியே பொருத்தப்பட்டுள்ளது.
எத்தனால் உருவான பிறகு தேவையற்ற தண்ணீரை தனியே வெளியேற்ற ஒரு பகுதி இருக்கிறது. இந்நிலையில், "டாம் க்யுன் சொல்வதைப்போல எத்தனால் தயாரிப்பது அவ்வளவு எளிதல்ல, நடைமுறை சிக்கல் நிறைய இருக்கிறது" என்கிறார் புதுப்பிக்கதத்தக்க மற்றும் தகுந்த எரிசக்தி (Renewable and Appropriate Energy) ஆய்வகத்தைச் சேர்ந்த டேனியல் கேமன்.
எத்தனால் தயாரிக்க அரசின் அனுமதி வேண்டும். தவிர அதிக அளவு எத்தனால் தயாரிக்க வேண்டுமானால், அதிக அளவு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும். இதில் தரக்கட்டுப்பாட்டுப் பிரச்சினைகளும் இருப்பதாக கேமன் தெரிவிக்கிறார்.
அத்தனை சலசலப்புகளுக்கு மத்தியிலும் டாம் க்யுன், "எங்கள் கண்டுபிடிப்பு எல்லோரின் அவ நம்பிக்கையையும் முறியடிக்கும். வீட்டிலேயே எளிதாக, குறைந்த விலையில், தரமான எத்தனாலை உருவாக்க முடியும்" என்று அடித்துக் கூறுகிறார்.
காரணம், இவர்கள் கண்டுபிடித்த கருவியின் சிறப்பம்சமே அதிலிருக்கும் மெல்லிய தோல் (Membrane) வடிகட்டிதான். "அது குறைந்த வெப்பநிலையில் திறம்பட செயல்பட்டு தண்ணீரையும் எத்தனாலையும் பிரித்துவிடுகிறது. வெளியேறும் தண்ணீர் ஏற்கெனவே சுத்திகரிக்கப்பட்டிருப்பதால் அதைப் பருகவும் செய்யலாம்" என்கிறார்.
டாம் க்யுன், வீட்டில் எத்தனால் தயாரிக்கும் மற்ற ஆசாமிகளைப் போலல்ல. நீண்ட நாள் தொழில் செய்துவரும் பெரிய தொழிலதிபர்.
இதுதவிர, ஃப்யூலின் இன்னொரு பங்குதாரரான ஃப்ளாய்டு பட்டர்ஃபீல்டு, வீட்டில் எத்தனால் தயாரிப்பதில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்லாது, 1982ம் ஆண்டு கலிஃபோர்னியா மாகாணத்தின் உணவு மற்றும் வேளாண் போட்டியில் சிறந்த எத்தனால் உருவாக்கக் கருவிக்கான பரிசையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நூறு சதவிகித எத்தனாலை வாகனத்தில் பயன்படுத்துவது சர்வதேச மோட்டார் விதிகளின்படி குற்றம். அதனால் 85 சதவிகித எத்தனாலும் மீத 15 சதவிகித பெட்ரோலும் சேர்த்து பயன்படுத்தவும் என்று பரிந்துரைக்கிறது இ-ஃப்யூல் கம்பெனி. மைக்ரோஃப்யூல்லர் எந்திரத்தின் தற்போதைய விலை ஏழாயிரம் அமெரிக்க டாலர்கள்.
நன்றிக
http://paddathumsuddathum.blogspot.in/2012/12/blog-post_4.html