உலகளந்தான் இராசராச சோழ தேவரின் சதயவிழா
************************** **************************
ராசராச சோழனின் பட்டப்பெயர்களில்
உலகளந்தான் என்பதும் ஒன்றாகும் ..
ஏன் அந்த பட்டம் அவனுக்கு .....
-------------------------- -------------------------- ------------------------
உலகளந்தான் கோல்
என்பது சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான
ஒரு கருவியாகும்.
நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது.
நாட்டில் பயிரிடும் வேளாண்மை நிலம் எவ்வளவு என்று தெரிந்தால்தான் விளைநிலம் எவ்வளவு, அதனால் வரும் வருவாய் காணிக்கடன் எவ்வளவு என்று திட்டவட்டமாகத் தெரியும். அதனால் முதலாம் இராசராசன் (1001), முதலாம் குலோத்துங்கன் (1086), மூன்றாம் குலோத்துங்கன் (1216) ஆகியோர் காலங்களில் சோழ நாட்டில் நிலம் அளக்கப்பட்டது.
• நிலம் அளத்தல்
நில அளவு செய்த அலுவலர்கள்
குரவன் உலகளந்தான் இராசராச மாராயன்,
உலகு அளவித்த திருவடிகள் சாத்தன்,
உலகளந்த சோழப் பல்லவரையன், குளத்தூருடையான் உலகளந்தான் ஆன திருவரங்க தேவன் ஆகியோர் ஆவர்.
அளவு செய்த கோல்கள்
‘திருவுலகு அளந்த ஸ்ரீபாதக்கோல்',
‘உலகளந்த கோல்' எனப்பட்டது.
இதன்மூலம் விளைநிலம் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டது. ஊரின் மற்ற பகுதிகளும் அளந்து குறிக்கப்பட்டன.
WWW.VAAA.IN
The Online Tamil Book shop
**************************
ராசராச சோழனின் பட்டப்பெயர்களில்
உலகளந்தான் என்பதும் ஒன்றாகும் ..
ஏன் அந்த பட்டம் அவனுக்கு .....
--------------------------
உலகளந்தான் கோல்
என்பது சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான
ஒரு கருவியாகும்.
நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது.
நாட்டில் பயிரிடும் வேளாண்மை நிலம் எவ்வளவு என்று தெரிந்தால்தான் விளைநிலம் எவ்வளவு, அதனால் வரும் வருவாய் காணிக்கடன் எவ்வளவு என்று திட்டவட்டமாகத் தெரியும். அதனால் முதலாம் இராசராசன் (1001), முதலாம் குலோத்துங்கன் (1086), மூன்றாம் குலோத்துங்கன் (1216) ஆகியோர் காலங்களில் சோழ நாட்டில் நிலம் அளக்கப்பட்டது.
• நிலம் அளத்தல்
நில அளவு செய்த அலுவலர்கள்
குரவன் உலகளந்தான் இராசராச மாராயன்,
உலகு அளவித்த திருவடிகள் சாத்தன்,
உலகளந்த சோழப் பல்லவரையன், குளத்தூருடையான் உலகளந்தான் ஆன திருவரங்க தேவன் ஆகியோர் ஆவர்.
அளவு செய்த கோல்கள்
‘திருவுலகு அளந்த ஸ்ரீபாதக்கோல்',
‘உலகளந்த கோல்' எனப்பட்டது.
இதன்மூலம் விளைநிலம் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டது. ஊரின் மற்ற பகுதிகளும் அளந்து குறிக்கப்பட்டன.
WWW.VAAA.IN
The Online Tamil Book shop
No comments:
Post a Comment