Tuesday, 5 December 2017

இல்லுறை தெய்வம்

இல்லுறை தெய்வம்
-------------------------------------
வீட்டில் வாழும் தெய்வம் 
--------------------------------------------- 

குடும்ப தெய்வமாகவோ
தனிப்பட்ட தெய்வமாகவே கருதிக்கொண்டு இல்லத்தில் வழிபாடு செய்யும் தெய்வம்
இல்லுறை தெய்வம் எனப்படும்

"அணங்குடை நல்லில் " என்கிறது மதுரை காஞ்சி (578)
அணங்கு(தெய்வம் ) உடைய நல்ல இல்லம் ....

தேவநேய பாவாணர் (தமிழர் மதம் நூலிலிருந்து )

-------------------------------------------------------------------------

மக்கள்
தமக்கென அமைத்துக் கொண்டுள்ள
இல்லங்களிலும் மனைவாயில் நிலைகளிலும் தங்களை இடர் நீக்கிக் காக்கும்
தெய்வம் உறைகின்றது
என்னும் நம்பிக்கையுடைய ராய்த்
தம் மனைக்கண் தெய்வத்தினை வழிபட்டு வந்தனர். 


-------------------------------------------------------------------------------
இக்குறிப்பு
அணங்குடை நல்லில் (மதுரைக் 578) எனவும், 'அணங்குடை நெடுநிலை’ (மதுரைக், 578) எனவும், அணங்குடை நெடுநிலை’ (மதுரைக் 535) எனவும்
வரும் மதுரைக் காஞ்சித் தொடர்களால் இனிது புலனாதல் காணலாம்.
----------------------------------------------------------------------------
இவ்வாறு மனைக்கண் உறைந்து
மக்களைக் காக்கும் தெய்வத்தினை

'இல்லுறை தெய்வம் (மதுரைக். நச். உரை)

இல்லுறை கடவுள் (அகம். 282) எனப் போற்றுதல் மரபு.

வீட்டுத் தெய்வத்திற்குப் படைத்தல் என்னும் இவ்வழக்கம் தமிழகத்தில் இக்காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றமை இங்கு நினைத்தற்குரியதாகும். அணங்கு என்னும் சொல் தெய்வத்தின் எல்லையற்ற பேருருவினையும் பேராற்றலையும் குறிக்கும்

WWW.VAAA.IN

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...