Monday, 18 September 2017

பாண்டியர் தலைநகர் மதுரை



பாண்டியர் தலைநகர் மதுரை 
-----------------------------------------------------
தமிழ் கெழு கூடல் - என சிறப்பிக்கப்படும் 
-----------------------------------------------------------------------
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே
-(புறநானூறு, 58 :13)
(கெழு = பொருந்திய; கூடல் = புலவர்கள் கூடும் மதுரை; தண்கோல் = குளிர்ச்சி பொருந்திய செங்கோல்.)
---------------------------------------------------------------------------இதனையே ஔவையார் கூறும்போது,

"பாண்டிய நன்னாடுடைத்து நல்ல தமிழ்"
---------------------------------------------------------------------
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி - 
இவன் குராப்பள்ளித் துஞ்சிய திருமாவளவன் காலத்தவன். 
அவனோடு நட்புக் கொண்டு வாழ்ந்தவன். 
'தமிழ் கெழு கூடல்' தண்கோல் வேந்தனாகிய இவனைப் பாடியவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் ஆவர்
--------------------------------------------------------------------------
பழந்தமிழ் நாட்டில் தமிழ் மொழியினைப் பேணி வளர்ப்பதற்காகச் சங்கத்தைப் பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்தனர்.
தமிழ்ப் புலவர்கள் சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்ததுடன் பல நூல்களை இயற்றினர்.
அதோடு மட்டுமல்லாமல் பிற புலவர்கள் இயற்றிய நூல்களை மதிப்பீடு செய்தும் வந்தனர்.
இதில் அமர்ந்திருந்த புலவர்கள் பல இலக்கியங்களைத் தமிழில் படைத்துத் தமிழ் மொழியின் மேன்மையை உலகிற்கு உணர்த்தினர்.
WWW.VAAA.IN
Tamil Online Book Shop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...