Wednesday, 23 August 2017

சிற்றினம் சேராமை


ஒழுக்க கேடு ,
ஊரார் குடும்பத்தை கெடுப்பவர் .
காமுகர் ,கொலை, கொள்ளை, குடி, சூது என்று வாழ்பவர்களின் சூழலில் வளரும் ஒருவனின் சிந்தனையும், 
--------------------------------------------------------------------------

அன்பு, உறவு,
நட்பு ஒழுக்கம்,
தொண்டு,குடிப்பெருமை என வாழ்க்கை நடாத்துபவர்களின் சூழலில் இருக்கும் ஒருவனின் எண்ண ஓட்டங்களும் ஒரே நிலையில் இருக்க முடியாது. சிற்றினம் சேர்தல் அல்லல் படுத்தும் தன்மையது. எனவே அக்கூட்டுறவை நீக்குக
--------------------------------------------------------------------------
கீழ்மக்களுடன் சேராதிருத்தல்.
ஒருவனது அறிவு,
அவன் மனத்துளதா? சாரும் இனத்துளதா?
இவ்வாறு ஆராயின்
மனத்திலுள்ளது போல் தோன்றினாலும்
சாரும் இனத்தினால் அது மாறும் தன்மையுடையதென்பது புலப்படும்.
அதனால் கீழ்மக்களோடு சேராதே என எச்சரிக்க்ப்படுகிறது.
- தமிழண்ணல்
------------------------------------------------------------------------
சிறிய இனம் என்பது சிறுமைப் பண்புகள்
அதாவது
தீய குணமும்
தீயொழுக்கமும் ,
தீய நோக்கமும்
கொண்டவர்களைக் குறிக்கும்.
--------------------------------------------------------------------------
சேரும் இனத்தினது நலம்
சேர்ந்தவரின் மனநலத்தை வெகுவாகப் பாதிக்கும் ஆற்றல் கொண்டது.
அதனால் இனநலம் சொல்லவந்த இவ்வதிகாரம் மனநலம் பற்றி நிறையப் பேசுகிறது.
--------------------------------------------------------------------------------
சிற்றினச் சேர்க்கை துன்பம் உறுவிப்பதால் சேரும் இனத்தின் தன்மையை ஆய்ந்து ஒருவர் அதில் தன்னை இணைத்துக் கொள்ளாமல்
காத்துக் கொள்ளவேண்டும் என்கிறது
இத்தொகுதிப் பாடல்கள்.
நல்லின உறவு கொள்ளல் சிற்றினம் சேர்தலுக்கு எதிர்மறையாக இருத்தலால்,
சிற்றினம் சேராமை என்பது நல்லினம் சேர்தலை அறிவுறுத்துவதாகிறது.. .
--------------------------------------------------------------------------------
சிறுமைப் பண்பு கொண்ட மக்கள் ஒரு குழுவாக இருந்தால் அது சிற்றினம் எனப்படும்
--திருக்குறளிலிருந்து
WWW.VAAA.IN
The Online Bookshop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...