சக்கரத்தின் கண்டுபிடிப்பு மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியில் ஒரு மைல்கல். அவனின் சமூக,பொருளாதார, பண்பாட்டு நிலையில் மிகப் பெரிய தாவல் என்றே இதை சொல்லலாம். பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள எல்லா பாரவண்டி(சக்கடாவண்டி)யின் சக்கரத்தின் உயரம் அதாவது விட்டம் 5.25 அடி என்பதாக இருக்கிறது.
அதன் சுற்றளவு 16.5 அடி. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாட்டு வண்டிகளின் சக்கரங்களும் இதே அளவில் தான் செய்யப்படுகின்றன. இந்த ஒற்றுமைக்குள் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. இன்று தூரத்தை அளக்க கிலோமீட்டர் என்ற அளவு முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தமுறை இந்தியாவில் 1957க்கு பின் தான் நடைமுறைக்கு வந்தது.
அதற்கு முன் மைல் என்ற அளவு முறை தான் நடைமுறையில் இருந்தது. மைல் வாய்பாட்டை கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 220 கஜம் - 1பர்லாங். அதாவது 660 அடி ஒரு பர்லாங்க். 8 பர்லாங் -1மைல். இதை அடிகணக்கில் சொல்வதென்றால் 5280 ஆகும். இந்த மைல் முறை பிரிட்டீஸாரிடம் இருந்தே நமக்கு அறிமுகம் ஆனதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் அது அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லலாம். எப்படி என்று பார்ப்போம்.
நமது வண்டிசக்கத்தின் உயரம் 5.25 அடி என்றும் சுற்றளவு 16.5 அடி என்றும் பார்த்தோம். வண்டிசக்கரம் ஒரு முறை சுற்றினால் அது கடக்கிற தூரம் 16.5 அடி என்பதாக இதை நாம் புரிந்து கொள்ளாம். நமது பாரம்பரை கண்க்கு முறையில் 1/4, 1/2 என்கிற பின்ன முறை முக்கிய இடத்தை பெறுகிறது. அந்த பின்ன முறையில் 1/320 என்கிற எண் சிறப்பு எண்ணாக கொள்ளப்படுகிறது. அந்த எண் முந்திரி என்பதாகும்.
எனவே வண்டிசக்கரம் ஒருமுறை சுற்றி கடக்கும் தனூரம் ஒருமுந்திரி மைலாகும். அதாவது 320x16.5= 5280 அடிகளாகும். மைல் என்கிற துராத்தை அளக்கும் முறை இங்கிருந்து மேற்குலகிற்கு போய் அங்கிருந்து மீண்டும் புதிய ஒன்றாக நமக்கு அறிமுகம் ஆகியிருக்கிறதோ என்ற நமது சந்தேகம் இந்த இடத்தில் தான் வலுபெறுகிறது.
வெள் உவன்
No comments:
Post a Comment