Tuesday, 11 February 2020

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ?
----------------------------------
தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பனர்கள் முயன்றுகொண்டே இருக்கிறார்கள். இராசகோலாச்சாரியாருக்குப் பிறகு நீண்ட நாள் அவர்கள் கனவு பலிக்கவில்லை !
பார்ப்பனர் அல்லாத கருணாநிதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார் பாபநாசம் சிவனின் தமையனார் இராசகோல அய்யரின் மகள் வி.என். சானகியின் கணவரான ம.கோ.இரா (M.G.R) !
அவர் மறைவுக்குப் பிறகு இராசகோபால அய்யரின் மகள் வி.என்.சானகி சில நாள் முதல்வராக இருந்தார் !
அவருக்குப் பிறகு செயராம அய்யங்காரின் மகள் செயலலிதா முதல்வராகப் பல காலம் ஆட்சித் தவிசில் அமர்ந்திருந்தார் !
இப்பொழுது பரமக்குடி சீனிவாச அய்யரின் மகன் கமலகாசன் முதல்வராக ஆக முடியுமா என்று முயன்று கொண்டிருக்கிறார் !
இன்னொரு பக்கம் ஒய்.ஜி.பார்த்தசாரதி அய்யரின் மகள் லதாவின் கணவர் சிவாசி ராவ் (இரசினிகாந்த) ஆட்சியைப் பிடிக்க மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் !
தமிழன் ஆரியர்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்பது தான் காலத்தின் தீர்ப்போ ?
-----------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051, சுறவம் (தை),23]
{06-02-2020}

#முருகன் திருமணம் ... சில விவாதங்கள் .. -1




#முருகன்
திருமணம் ... சில விவாதங்கள் .. -1
**************************************************************
முருகனுக்கு ஒரு மனைவியா?...
இரண்டு மனைவியா?...
.
வள்ளியா? தேவயானியா?
.
முருக கடவுளின் வரலாற்றில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்க்க..
.
முருகன் வரலாற்றை மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும்.
.
1- குறிஞ்சித் திணை தெய்வமான முருகன்
2- தமிழ் கடவுளான முருகன்
3- புராணக் கடவுளாக உருவகம் செய்யப்பட முருகன்
.
.
குறிஞ்சித் திணை தெய்வமான முருகன்.
வள்ளி திருமண கதை முழுவதுமே
குறிஞ்சித் திணையில் நடைபெற்ற நிகழ்வுகள் தான்.
.
குறிஞ்சி பகுதியான
மலையும் மலை சார்ந்த பகுதியில் இருக்கும்
மயிலும், யானையும்
முருகனின் வாகனமாக சிற்பங்களில் காணக் கிடக்கின்றன.
.
பெரும்பாலோர் மயில் மட்டுமே முருகனின் வாகனமாக நினைக்கின்றனர்.
.
ஆனால் தமிழக காட்டுபகுதிகளில் அதிகமாக இருந்த யானையும் முருகனின் வாகனமாக இருக்கிறது.
.
இந்த யானைதான் வள்ளியா? தெய்வானையா? என்ற சிக்கலை அவிழ்க்க உதவி இருக்கிறது.
.
காட்டு பகுதியில் இருக்கும் யானையால் ஏற்பட்ட அபாயத்தில் இருந்து வள்ளியம்மையை காப்பாற்றிய நிகழ்வுதான் ...கந்தனுக்கு பிள்ளையர் உதவியதாக பிற்காலத்தில் கதையாக்கப்பட்டுள்ளது
.
திணைப்புனம் காத்தாள் வள்ளி என்பது குறிஞ்சி நில மகளீரின் தொழில்
.
வள்ளி என்ற பெயரின் காரணத்தை தேட
பெரிய சிந்தனை எதுவும் தேவையில்லை.
வள்ளி கிழங்கு அகழ்ந்த குழியா?
வள்ளி கொடியா?
புள்ளிமான் வயிற்றில் பிறந்தவளா என
வள்ளி என்ற பெயரும் வைக்க....
காரணம் தேட வேண்டிய அவசியம் இல்லை....
.
தமிழர்கள் இயற்கை வாழ்வினர் நதியின் பெயரும், மரத்தின் பெயரும், மலரின் பெயரும், விலங்கின் பெயரும் என இயற்கை பெயர்களை வைப்பது இங்கு இயல்பான ஒன்று. ஆகையால் வள்ளி என்று பெயர் வைக்க காரணம் எதுவும் தேவையில்லை.
.
19....,20.....,21..... ம் நூற்றாண்டில்
திடீரென முளைத்த அரசியல், சமூக விஞ்ஞானிகள் முருகன் முதன்முதலில் கலப்பு திருமணம் செய்தவர் என அதிபயங்கர கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாக சொல்லிக் கொள்கிறார்கள்.
.
முருகனோ, குறிஞ்சி நிலக்குறவன், வேடன்,
வள்ளியம்மையோ குறிஞ்சி நிலக்குறத்தி ,
மற்றொரு குறிஞ்சி நில வேட்டுவ தலைவனின் மகள்
இதில் எங்கு இருந்து கலப்பு மணம் வந்தது என்று தெரியவில்லை.
காமாலை கண்டவனுக்கு கண்டது எல்லாம் மஞ்சள் என்பது போல
இவர்கள் அரசியல் வியாபரத்துக்கு
அவரை வம்புக்கு இழுக்கிறார்கள்.
.
ஆக
வள்ளித் திருமணம் கதை முழுவதுமே
சங்க இலக்கிய மரபுபடி அக வாழ்க்கையை கொண்ட நிகழ்ச்சிகள் தான்.
அது திணைபுனம் காப்பதாக இருக்கட்டும்,
குறி கேட்ப்பதாக இருக்கட்டும்,
வேலன் வெறியட்டு நிகழ்த்துவதாக இருக்கட்டும்
அனைத்துமே சங்கத் தமிழ் மரபு தான்.
முருகன் தமிழர்களின் மிகப் பழமையான தெய்வம்
குறிஞ்சி நில தெய்வம்.
..
ஐந்திணை தெய்வங்களில் குறிஞ்சி முருகன்
சேயொன், சிவந்தவன்- சிவனாக மாறி சைவ மதத்தின் முழு முதற் கடவுளாக பரிணமித்தான்.
.
முல்லை நில மாயவன், திருமாலாக வைணவமத கடவுளாக மாறிப்போனான்.
.
இவர்கள் இருவரும் பெருந்தெய்வங்களாக பெருந்தெய்வ மதங்களின் கடவுளர்களாக நிலைபெற்றனர்.
.
மருத நிலத் தெய்வமான இந்திரன். தேவர்களின் தலைவனாக தேவேந்திரனாக பிற்க்கலத்தில் மாறிப்போனான்.
.
நெய்தல் தெய்வமான வருணன் புத்த மத தாக்கத்துக்கு பிறகு மணிமேகலை தெய்வமாக கடல் காவல் தெய்வமாக மாற்றம் பெற்றது.
.
பாலை தெய்வமான கொற்றவை இன்றுவரை போர்குடிகளின் தெய்வமாக போர்க்குடியான முக்குலதோர்களால் தாயாக வணங்கப்படுகிறாள்.
.
ஆக
முருகனுக்கு வள்ளி மனைவி என்பது உறுதியாகிறது.
மேலும்
சிவ்னாக
முருகன் பரிணமித்து இருப்பதால்
.
சக்தியை தன் உடலில் பாதியாக கொண்ட
ஆணுக்கு பெண் சமம் என்ற
சிவசக்தி தத்துவத்தின்
அடிப்படை உருவாக காரணமான முருகன்
இரண்டு மனையாளை கொண்டிருக்க முடியது
என்பது முடிபு.
.
வள்ளி மட்டுமே மனைவியாக இருக்க முடியும் என்பதை கண்டோம்.
.
அப்படியானால் தேவயானி யார் என்பதை அடுத்து பார்ப்போம்
தொடரும்...

மூதேவி

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வம் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்... மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.
மூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.
தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு 'கந்தழி' என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள், தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு, 'நடுகல்' வழிபாடு என்று பெயர்.
இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு.
கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள்.புராணங்களில் தவ்வை பற்றி :
சைவ - வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழரின், உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன் மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தவ்வை வழிபாடு :
பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு.
வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன.
தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன.
பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து 'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்.
தவ்வை வழிபாடு பற்றி வரலாற்று ஆய்வாசிரியர் தொ. பரமசிவத்திடம் கேட்டோம். "வளத்தின் மூல வடிவமே ஜேஸ்டாதேவிதான் (தவ்வை). திருவள்ளுவர் ஜேஸ்டாதேவியை தவ்வை என்று சொல்கிறார். லட்சுமியின் அக்கா மூதேவி(தவ்வை). மூதேவிதான் தற்போது ஜேஸ்டாதேவியாக வழிபடப்படுகிறாள். தவ்வை உரத்தின் கடவுள். லட்சுமி விளைந்த தானியங்களின் கடவுள். தவ்வை மங்கலமான தெய்வம்.
தமிழ்நாடு முழுவதும் தவ்வைக்குச் சிலைகள் பல உள்ளன. சிலர் எந்த சாமி என்றே தெரியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் அழுக்காப் போன கடவுள் என்று ஒதுக்குகிறார்கள். அது தவறு. வளங்களுக்கெல்லாம் மூல வளமே அழுக்குதான். எனவே அனைவரும் ஜேஸ்டாதேவியை வழிபடவேண்டும்" என்கிறார் பரமசிவம்.
தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். அதேபோல், 'என்னைப் பார் யோகம் வரும்' என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளை நாம் காண முடியும். கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது.

சக்கரத்தின் கண்டுபிடிப்பு



சக்கரத்தின் கண்டுபிடிப்பு மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியில் ஒரு மைல்கல். அவனின் சமூக,பொருளாதார, பண்பாட்டு நிலையில் மிகப் பெரிய தாவல் என்றே இதை சொல்லலாம். பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள எல்லா பாரவண்டி(சக்கடாவண்டி)யின் சக்கரத்தின் உயரம் அதாவது விட்டம் 5.25 அடி என்பதாக இருக்கிறது.
அதன் சுற்றளவு 16.5 அடி. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாட்டு வண்டிகளின் சக்கரங்களும் இதே அளவில் தான் செய்யப்படுகின்றன. இந்த ஒற்றுமைக்குள் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. இன்று தூரத்தை அளக்க கிலோமீட்டர் என்ற அளவு முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தமுறை இந்தியாவில் 1957க்கு பின் தான் நடைமுறைக்கு வந்தது.
அதற்கு முன் மைல் என்ற அளவு முறை தான் நடைமுறையில் இருந்தது. மைல் வாய்பாட்டை கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 220 கஜம் - 1பர்லாங். அதாவது 660 அடி ஒரு பர்லாங்க். 8 பர்லாங் -1மைல். இதை அடிகணக்கில் சொல்வதென்றால் 5280 ஆகும். இந்த மைல் முறை பிரிட்டீஸாரிடம் இருந்தே நமக்கு அறிமுகம் ஆனதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் அது அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லலாம். எப்படி என்று பார்ப்போம்.
நமது வண்டிசக்கத்தின் உயரம் 5.25 அடி என்றும் சுற்றளவு 16.5 அடி என்றும் பார்த்தோம். வண்டிசக்கரம் ஒரு முறை சுற்றினால் அது கடக்கிற தூரம் 16.5 அடி என்பதாக இதை நாம் புரிந்து கொள்ளாம். நமது பாரம்பரை கண்க்கு முறையில் 1/4, 1/2 என்கிற பின்ன முறை முக்கிய இடத்தை பெறுகிறது. அந்த பின்ன முறையில் 1/320 என்கிற எண் சிறப்பு எண்ணாக கொள்ளப்படுகிறது. அந்த எண் முந்திரி என்பதாகும்.
எனவே வண்டிசக்கரம் ஒருமுறை சுற்றி கடக்கும் தனூரம் ஒருமுந்திரி மைலாகும். அதாவது 320x16.5= 5280 அடிகளாகும். மைல் என்கிற துராத்தை அளக்கும் முறை இங்கிருந்து மேற்குலகிற்கு போய் அங்கிருந்து மீண்டும் புதிய ஒன்றாக நமக்கு அறிமுகம் ஆகியிருக்கிறதோ என்ற நமது சந்தேகம் இந்த இடத்தில் தான் வலுபெறுகிறது.
வெள் உவன்

நிலவுடமை ஆதிக்கமும் காலனிய ஆதிக்கமும்.


நிலவுடமை ஆதிக்கமும் காலனிய ஆதிக்கமும்.
சுரண்டல்களிலும் மானிடப் பேரழிவை நிகழ்த்தியதிலும் காலனிய ஆட்சிக்கு அருகில்கூட இந்திய ஒடுக்குமுறைகள் வரமுடியாது.
இந்தியாவில் மற்றமைகளை அங்கீகரிப்பார்கள் ஆனால் தாழ்ந்தபடிநிலையில் வைப்பார்கள்.
மேற்கத்திய காலனிய ஆக்கிரமிப்பாளர்கள் உலகெங்கும் மற்றமைகளை அழிப்பதையே செய்தார்கள்.கோடிக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தார்கள்.
*****
பல்லக்கு ஒருவரை நான்கு பேர் சுமப்பது.
காலனிய ஆட்சியாளர் பரவலாக்கிய மனிதன் இழுக்கும் ரிக் ஷா ஒருவரையோ அதிகமானவரையோ வைத்து ஒரு மனிதன் இழுப்பது.
எது அதிகம் மானிட விரோதம்!😊

Nadesapillai Sivendran

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் !-

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் !-----------------------------------------------------------------------
பாடலின் பின்னணி :
பாரி இறந்த பின்னர், அவரது இரு மகளிரையும் கபிலர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியது. அம்மகளிர் தம் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள் !
------------------------------------------------------------------------------
புறநானூறு.பாடல்.112.
------------------------------------------------------------------------------
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
------------------------------------------------------------------------------
பாடலின் பொருள்:
ஒரு மாதத்திற்கு முன்பு, நிறைமதி நீலவானில் ஓளிவீசிக் கொண்டிருந்த அந்த நாளில் நாங்கள் எங்கள் தந்தையைப் பெற்றிருந்தோம்; எங்கள் ஆட்சிக்குரிய (பறம்பு) மலையும் எங்களிடம் இருந்தது. அதேபோல், இன்றும் நிறைமதி நீலவானில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்நாளில் எம் தந்தையும் இல்லை; எம் மலையும் எம்மிடம் இல்லை !
போரில் வென்ற வேந்தர்கள் எங்கள் மலையைக் கவர்ந்து கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கிறோம் !
------------------------------------------------------------------------------
சிறப்புக் குறிப்பு:
மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் அவனை சூழ்ச்சியால் வென்றனர். “வென்றெறி முரசின் வேந்தர்” என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.
------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ; 2051, சுறவம்,28]
{11-02-2020}

BSNLன் மறுமலர்ச்சி! வோல்டே சேவை தொடக்கம்!

BSNLன் மறுமலர்ச்சி! வோல்டே சேவை தொடக்கம்!
கோவையில் தொடங்கி வைத்தார் BSNL CMD!
செயற்கரிய செய்வார் பெரியர்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
முற்றிலும் புதிய ஒரு சேவையை கோவை மாநகரில்
BSNLன் தலைவர் திரு பிரவீன் குமார் புர்வார் நேற்று
தொடக்கி வைத்தார். இந்தச் சேவைக்கு வோல்டே
சேவை என்று பெயர்.
VoLTE என்றால் Voice over LTE என்று பொருள்படும்.
LTE என்றால் Long Term Evolution ஆகும். இது குறித்து
சிறிது முயற்சி செய்து புரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி சேவை என்றால் குரல் சேவை (voice)
மட்டுமே என்று ஒரு காலம் இருந்தது. ஓரிடத்தில்
இருந்து இன்னொரு இடத்திற்கு குரலை (voice)
அனுப்புவதும் பெறுவதுமே (transmission and reception)
தொலைபேசி சேவையாக ஆரம்ப காலத்தில் இருந்து
வந்தது. இது analogue வகையிலான சேவை ஆகும்.
தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது.
குரல் சேவைக்காக தனித்த குரல் சர்க்யூட்கள்
(voice circuits) உருவாக்கப் பட்டன.
காலப்போக்கில் தொலைதொடர்பின் வளர்ச்சியில்
குரல் சேவை மட்டுமே ஒரே சேவை என்றிருந்த
நிலை மாறி, தரவுப் பரிமாற்ற சேவை, இணைய சேவை
போன்றவையும் சேவைகளாக உருவெடுத்தன.
ஆரம்பத்தில் Wired network மூலமாக வழங்கப்பட்ட
இச்சேவைகள் வயர்லெஸ்சின் வளர்ச்சியைத்
தொடர்ந்து. வயர்லெஸ் மூலமாக வழங்கப்பட்டு
வருகின்றன.
LTE என்பது Long Term Evolution ஆகும். இதை
நீண்ட காலப் பரிணாம வளர்ச்சி என்று எவரேனும்
மொழிபெயர்த்து உயிரை இழக்க வேண்டாம் என்று
எச்சரிக்கிறோம். நீண்ட, நெடிய போன்ற சொற்களுக்கு
தொலைதொடர்பில் இடமில்லை.
தொலைதொடர்பு என்பதே காலத்தையும் தூரத்தையும்
வெல்லுவதற்காகப் பிறந்தது: வென்று நிற்பது.
(Annihilation of time and distance). நேற்று கோவையில்
எங்கள் தலைவர் (CMD) அவர்கள் தொடக்கி வைத்த
VoLTE சேவையின் சிறப்பம்சம் என்னவெனில், இதில் டயல் செய்தவுடன்
தொடர்பு கிடைக்கும்
Hunting tone, beep sounds ஆகியவை எல்லாம்
முற்றிலுமாக இச்சேவையில் அகற்றப் பட்டு விட்டன.
Instantaneous connection is ensured. சென்னையில் இருந்து
14,000 கிமீ தூரத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில்
வாழும் உங்கள் மகனுடன் பேச வேண்டுமா? நம்பரை
டயல் செய்து முடித்தவுடன் உங்கள் மகனின் குரல்
கேட்கும். இதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.
BSNLஐச் சேர்ந்த நாங்கள் ஒரு அகராதி (dictionary)
வைத்திருக்கிறோம். அதில்,தொலைதொடர்பு என்பதற்கு
instantaneous என்று பொருள் தரப்பட்டுள்ளது.
LTE என்பது மொபைல் தொலைபேசிகளில் செயல்படும்
wireless broadband குறித்த ஒரு தரப்படுத்தல் (standard).
அதாவது LTE என்பது இன்னின்ன specificationsஐக்
கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் சட்ட திட்டம்.
4G LTE என்றால் LTE தொழில்நுட்பத்தின்
அடிப்படையில் அமைந்த 4G என்று பொருள்.
ஒரிஜினல் 4G வேறு; 4G LTE வேறு. 4G LTE என்பது
ஒரிஜினல் 4Gயை விட சற்றே குறைந்த spec உடையது.
வோல்டே சேவை (VoLTE) என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட
சர்க்யூட்களில், குரல் சேவையை அவற்றின் மீது
ஏற்றி வழங்குவதே வோல்டே சேவை ஆகும்.
தரவுகளைப் பரிமாறிக் கொள்ள உருவாக்கப்பட்ட
data circuitsகளில் குரல் சேவையை அடிஷனலாக
வழங்குவதே வோல்டே சேவை ஆகும். தனித்த
voice circuitsஐ உருவாக்கும் தேவை இல்லாமலே
இருக்கின்ற data சர்க்யூட்களைப் பயன்படுத்தி
குரல் சேவையை வழங்குவது VoLTE ஆகும்.
VoIP குறித்து தொழில்நுட்பப் பரிச்சயம் உடையவர்கள்
அறிந்திருக்கலாம். அதைப் போன்றதே VoLTE.
(VoIP = Voice over Internet Protocol).
வோல்டே சேவையில் backward compatibility உண்டு.
எனவே 2G GPRS, 2G EDGE, 3G (UMTS) தொழில்நுட்பத்தையும்
வோல்டே சேவை அரவணைத்துச் செல்லும்.
அண்ணா சாலையில் இரவு நேரத்தில் 100 கிமீ
வேகத்தில் ஒரு பென்ஸ் காரில் செல்கிறீர்கள்.
வண்டியை டிரைவர் ஓட்டுகிறார். நீங்கள்
BSNL VoLTE சேவை உடைய மொபைலில் 4G வேகத்தில்
தர்பார் படம் பார்த்துக் கொண்டே, சான்
பிரான்சிஸ்கோவில் உள்ள உங்கள் மகனுடன் குடும்ப
விஷயங்களையும் பேசுகிறீர்கள். இதை BSNL
நடத்திக் காண்பிக்கிறது.
இதுதான் BSNLன் புத்தாக்கத் திட்டம் செயல்பாட்டுக்கு
வந்ததன் அடையாளம்! இதுதான் BSNLன் மறுமலர்ச்சி!
உயர்ந்து நிற்கும் உருக்குப் போன்ற பாறை மீது
சதா அலைகள் வந்து மோதுகின்றன.
என்றாலும் அலைகள்தான் சிதறுகின்றன.
BSNL என்னும் பாறை சிதறுவதில்லை!
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
தெரிந்தெடுக்கப்பட்ட சில தென்னிந்திய நகரங்களில்
மட்டுமே VoLTE சேவை உள்ளது. அங்குள்ள BSNL
வாடிக்கையாளர்கள் உரிய handsetஉடன்
இச்சேவையை அனுபவிக்குமாறு வேண்டுகிறோம்.
இச்சேவைக்கு எவ்விதக் கூடுதல் கட்டணமும் இல்லை!
*********************************************************

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...