Sunday, 3 June 2018

போராட்டம்

போராட்டம் 


போர் + ஆட்டம் =போராட்டம்
போர் போன்ற நடனம்
அல்லது
எதிர்ப்பை ஆட்டம் போன்று 
வெளிப்படுத்துவது .
-
இது
பழங்குடி பண்பாடு
வெள்ளையரை எதிர்த்த
தண்டகாரண்ய பழங்குடிகள்
பிர்சாமுண்டா
தலைமையில்
அணிவகுத்தபோது
வெள்ளையரை எதிர்த்து
தங்கள் ஆயுதங்களுடன்
நடனமாடினார்.
வெள்ளையரை தாக்கவில்லை
ஆனாலும் வெள்ளையர் அவர்களை சுட்டு கொன்றனர்.
பழங்குடி பண்பாடு என்பது.
பெரும்பாலும் உயிர் நேயத்துடன் இருக்கும்
.
நவீன தொழில்நுட்பம்
என்பது பெரும்பாலும்
இயந்திரங்களை பயன்படுத்துவதாலோ என்னமோ
அது
உணர்ச்சியற்றதாக இருக்கிறது.
துப்பாக்கியின் குண்டுகள் வழியாக பேசுகிறது
----------
மன்னராட்சியில்
மக்களை
தங்களுடைய பிள்ளைகளாக கருதும் குணத்தினாலும்
நீண்ட காலம் ஆட்சி செய்ய வேண்டியிருப்பதாலும்
மாறுவேடத்தில் சென்றும் ,
உளவு படை கொண்டும்
மக்கள் கருத்தை அறிந்து
அரசாட்சி நடத்தினர் .
ராமன் சீதையை பிரிந்ததும்
மக்கள் கருதினால் என்பதை அறிவீர்கள் .
----------------
மக்கள் ஆட்சியியல்
ஒருவர் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டிய
அவசியம் இருப்பதில்லை
அதனால்
அவர்கள் மக்கள் கருத்தை அதிகம்
கவனத்தில் கொள்வதில்லை .
அதன் காரணமாக
போராட்டம் ,ஆர்ப்பாட்டம் என்பவை
ஜனநாயத்தின் தூண்களாக உருவானது .
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பு +ஆட்டம் --ஆர்ப்பரிக்கும் எதிர்ப்பு .
இது போன்ற போராட்டம் மூலமாக
தமது விருப்பு வெறுப்புகளை
கருத்தை
அரசுக்கு
மக்கள் தெரிவிக்கின்றனர்
அந்த கருத்தை
அரசு ஆராய்ந்து முடிவெடுக்கிறது .
இந்த வாய்ப்பு மன்னராட்சில் இல்லை .
இந்த
மக்கள் கருத்தை தெரிவிக்கும்
போராட்ட வடிவம்
மக்களாட்சியை தாங்கும் தூணாகும்.
தூணை ஒடுக்கினால்
மக்களாட்சி வீழ்ந்துவிடும்
WWW.VAAA.IN




Friday, 1 June 2018

புதைப்பதும் எரிப்பதும்



மனிதர்கள் மரணம் அடைந்தவுடன் 
புதைப்பதும் 
எரிப்பதும் 
உலகம் முழுதும் நடைமுறையில் உள்ளது
நமது முறை என்ன ? 
எனும் போது 
திருமூலரின் கருத்தை 
உற்றுநோக்க வேண்டியுள்ளது .
சாதாரண மனிதர்களை
எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் 
ஆனால்
ஞானிகளை , சமாதி அடைந்தவர்களை 
புதைக்க மட்டுமே செய்ய வேண்டும் .
நமது முறையில்
அடுத்து 
அவர்களை புதைத்த இடத்தில் 
லிங்கம் 
அல்லது ஆல் , அரசு போன்ற மரங்களை 
நட வேண்டும்
அவ்வாறு இல்லாமல் அவர்கள் எரித்தால் 
சுற்று பகுதிக்கு 
சரியான மழை இல்லாமல் 
பஞ்சம் ஏற்படும் என்கிறார்.
ஆக 
ஞானிகளை புதைப்பதும் 
மற்றவர்களை எரிப்பதும் 
சரியே
வள்ளல் போன்றவர்கள் 
புதைக்க சொல்வது
மீண்டும் உயிர்த்து வருவது
என்பதெல்லாம்
அந்த ஞானிகளின் 
அளவற்ற
கருணை மிக்க
சிந்தையே தவிர வேறில்லை .
உண்மை வேறு

வாழ்க்கையில் வெற்றி

காதல் வெற்றியை விட
வாழ்க்கையில்
வெற்றி பெறுவதே முக்கியமானது.
எனவேதான் 
நமது முன்னோர்கள்
காதலுக்கு முக்கியத்துவம் தராமல்
வாழ்க்கையில்
வெற்றி தரக் கூடிய வகையில்
திருமணங்களுக்கு
ஏற்பாடு செய்தனர்.
Perumal Ammavasi Thevan

வரலாறு ஒரு ஆலயம்!

முகநூலில் பேசுவதால்
எதுவும் நிகழப்போவதில்லை!
சரித்திரம் தனது கதவுகளை
அனைத்து வாசகனுக்கும்
திறந்தே வைத்திருக்கிறது.
அதன் வாசலில் நுழைய
ஒரு மாபெரும் தகுதி வேண்டும்.
கோயிலுக்குள் சட்டையைக்கழற்றிவிட்டுச் செல்வது போல
சரித்திர நுழைவாயில் வாசற்படிகளில்
கால் வைக்கும் ஒருவன்,
சொந்த அபிமான, பேத, விரோதங்களை கலைந்துவிட்டு கடக்கவேண்டும்.
முன்முடிவுகளோடு
அவ் வரலாற்றுக்கோயிலை
ஒருவன் அணுகக்கூடாது.
தான் ஒன்றுமே கற்கவில்லை எனும் எண்ணத்தோடுதான் அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.
பல்வேறு ஆய்வாளர்கள்
பசி-பட்டினி-பிணி-வெயில்-காற்று- மழை- வெள்ளம்-புயல்-பூகம்பங்களைக் கடந்து
அரும்பாடு பட்டு சேகரித்த ஆவணங்களை ஒருபோதும்
தம்முடையதாகக் கருதக்கூடாது.
அவைகளைக் காணும் பாக்கியங்களை
நம் கண்களும், அவற்றை கற்றுணரும் அறிவை
நம் மூளையும் பெற்றிருக்க
நாம் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
முதல் வாயிலைக்கடக்கும் முன்னரே
எல்லாம் அறிந்துவிட்டேன்
என்ற உணர்வு ஒருவனுக்கு வந்துவிட்டால்,
அவன் கல்வி அதோடு முடிந்துவிடும்.
மாறாக அடக்கத்துடன்
கருவறை வரையிலும்
சென்று தரிசனம் பெற்ற பிறகும்
அதை வலம்வந்துகொண்டிருப்பனைத்தான்
அந்த வரலாற்றுக்கடவுளும் விரும்பும்.
கடவுளும்-வரலாறும் வெவ்வேறல்ல!
இரண்டுமே போற்றுதலுக்குரியவை.
அனேக பேர்வழிகள்
முதல்வாயிலையே கடக்காமல்
அடுத்தகதவு திறக்கப்படாமல் ஓடிவிடுவார்கள்.
இது ஒரு தவம் போன்றதாகும்.
பொறுமையிழந்தவனுக்கு புத்தி கிடைக்காது.
நானும் ஆரம்ப காலங்களில்
எதையும் முன்முடிவோடு
தற்சார்பான நிலைகளை எடுத்ததுண்டு!,
ஆனால்
அவை பயன்தராதவை என்பதை உணர்ந்து
பின்பு என்னை
மாற்றிக்கொள்ள முனைந்தேன்.

Muniraj Vanathirayar

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...