Friday, 1 June 2018

வரலாறு ஒரு ஆலயம்!

முகநூலில் பேசுவதால்
எதுவும் நிகழப்போவதில்லை!
சரித்திரம் தனது கதவுகளை
அனைத்து வாசகனுக்கும்
திறந்தே வைத்திருக்கிறது.
அதன் வாசலில் நுழைய
ஒரு மாபெரும் தகுதி வேண்டும்.
கோயிலுக்குள் சட்டையைக்கழற்றிவிட்டுச் செல்வது போல
சரித்திர நுழைவாயில் வாசற்படிகளில்
கால் வைக்கும் ஒருவன்,
சொந்த அபிமான, பேத, விரோதங்களை கலைந்துவிட்டு கடக்கவேண்டும்.
முன்முடிவுகளோடு
அவ் வரலாற்றுக்கோயிலை
ஒருவன் அணுகக்கூடாது.
தான் ஒன்றுமே கற்கவில்லை எனும் எண்ணத்தோடுதான் அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.
பல்வேறு ஆய்வாளர்கள்
பசி-பட்டினி-பிணி-வெயில்-காற்று- மழை- வெள்ளம்-புயல்-பூகம்பங்களைக் கடந்து
அரும்பாடு பட்டு சேகரித்த ஆவணங்களை ஒருபோதும்
தம்முடையதாகக் கருதக்கூடாது.
அவைகளைக் காணும் பாக்கியங்களை
நம் கண்களும், அவற்றை கற்றுணரும் அறிவை
நம் மூளையும் பெற்றிருக்க
நாம் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
முதல் வாயிலைக்கடக்கும் முன்னரே
எல்லாம் அறிந்துவிட்டேன்
என்ற உணர்வு ஒருவனுக்கு வந்துவிட்டால்,
அவன் கல்வி அதோடு முடிந்துவிடும்.
மாறாக அடக்கத்துடன்
கருவறை வரையிலும்
சென்று தரிசனம் பெற்ற பிறகும்
அதை வலம்வந்துகொண்டிருப்பனைத்தான்
அந்த வரலாற்றுக்கடவுளும் விரும்பும்.
கடவுளும்-வரலாறும் வெவ்வேறல்ல!
இரண்டுமே போற்றுதலுக்குரியவை.
அனேக பேர்வழிகள்
முதல்வாயிலையே கடக்காமல்
அடுத்தகதவு திறக்கப்படாமல் ஓடிவிடுவார்கள்.
இது ஒரு தவம் போன்றதாகும்.
பொறுமையிழந்தவனுக்கு புத்தி கிடைக்காது.
நானும் ஆரம்ப காலங்களில்
எதையும் முன்முடிவோடு
தற்சார்பான நிலைகளை எடுத்ததுண்டு!,
ஆனால்
அவை பயன்தராதவை என்பதை உணர்ந்து
பின்பு என்னை
மாற்றிக்கொள்ள முனைந்தேன்.

Muniraj Vanathirayar

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...