Monday, 18 September 2017

பதவி சண்டையால் தமிழகத்தை சிதைத்த பாண்டியர்கள்

பதவி சண்டையால் தமிழகத்தை சிதைத்த பாண்டியர்கள்
***********************************************************
1311 ஆம் ஆண்டு நவம்பா் மாதம்! தமிழ் நிலம்!
ஆட்சி பொறுப்பில் இருந்த பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் தமிழகம் முழுமையும் ஆட்சி செய்து, புகழின் உச்சியில் இருந்த காலம், அப்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது.
இத்தாலிய யாத்ரிகர் மார்கோ போலோ தனது பாண்டிய நாட்டு பயணத்தை முடித்து விட்டு, தமிழர்களின் பெருமைகளை, மக்களின் எளிமையான வாழ்வை, அமைதியான வாழ்வை பற்றி, எழுதிய காலம் அது.
---------------------------------------------------------------------------
குலசேகர பாண்டியனின் ,
இரு புதல்வர்களிடையே ஏற்பட்ட பதவி போட்டியில், தம்பி வீர பாண்டியனுக்கு பதவி கிடைத்துவிட
அண்ணன் சுந்தர பாண்டியன்
டெல்லி அரசா் அலாவுதின் கில்ஜியின்
படைதளபதி மாலிக்கபூரிடம் உதவி கேட்டதால்,
----------------------------------------------------------------------------
அவா் மதுரைக்குள் பெ௫ம்படையுடன் நுழைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கோயில்கள் சிதைக்கப்பட்டதாகவும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதாகவும்,
சொத்துகள் சூரையாடப்பட்டதாகவும்,
இந்த வெறிச்செயல் பல நாட்கள் நடந்ததாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் வடநாட்டு படை தமிழகத்தை வெற்றி கண்ட வ௫டம் அது.
தமிழ் நிலம் தோல்விகண்டு, சிதைந்துபோன காட்சிகள் பல நிகழ்ந்த காலம் அது.
மாலிகபூா் படை
மதுரையை விட்டு வெளியேறியபோது,
312 யானைகள் மற்றும் 2000ம் குதிரைகள் மேல், செல்வங்களை ஏற்றி சென்றதாகவும்,
மேலும் 10 கோடி தங்க காசுகளை எடுத்துச் சென்றதாகவும் செய்திகள் முலம் அறிகிறோம்.
அந்த ஆண்டு ஏற்பட்ட அழிவிலி௫ந்து தமிழ் நிலம் மீண்டு வெளிவர அறுநூறு ஆண்டுகள் காத்தி௫க்க வேண்டியி௫ந்தது.
மாலிக்கபூர் படையெடுப்புக்கு பின் தமிழகம் தத்தளித்தபோது, சேர அரசர் குலசேகரபெருமான் காஞ்சி வரை வந்து அதைக் கைபற்றியதாகத் தெரிகிறது. ஆனால் நீண்ட காலம் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. கேரளா படையெடுப்பை தொடர்ந்து, தெலுங்கு வம்சத்தவரான காக்காட்டியர் காஞ்சியை பிடித்து ஆண்டதாக தெரிகிறது. இவர்கள் தெற்கில் ஸ்ரீரங்கம் வரை சென்று வெற்றி பெற்றதற்கான சான்றுகள் உள்ளன.
1323 ஆம் ஆண்டு
உலுக்கான் என்ற முகமது பின் துக்ளக் மதுரை மீது படையெடுத்து, அதை கைப்பற்றினார்
இதன் பிறகு மதுரை, டெல்லி அரசின்கீழ் கொண்டுவரப்பட்டு, ஆளுநர் மூலம் ஆட்சி செலுத்தப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு முகமதியா்கள் ஆட்சி தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக அறிகிறோம்.
-------------------------------------------------------------------------
பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன்,
கைதியாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக R.கார்டுவெல் தெரிவிக்கிறார்.
------------------------------------------------------------------------
மதுரை சுல்தான்கள் ஆட்சி என்று அழைக்கப்படும் இவர்கள் ஆட்சி சுமார் 47 ஆண்டுகள் (1323 முதல் 1370 வரை) நடைபெற்றதை அறிய முடிகிறது.
http://kalirajathangamani.blogspot.in/2015/04/blog-post.html
WWW.VAAA.IN
The Online Tamil Bookshop

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...