Friday, 23 June 2017

சேரமான் கணைக்கால் இரும்பொறை

நெஞ்சில் நின்றவன் ..
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரனுக்கும் சோழனுக்கும் போர்.
சோழன் வென்றான் சேரன் குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான் ..
சேரனின் நண்பரான புலவர் சோழன் அவையில் அவனை புகழ்ந்து பாட
சோழன் உமக்கு என்ன பரிசில் வேண்டும் என கேட்க்கிறான் ..
புலவன் சேரனை விடுவிக்குமாறு கேட்கிறான் ..
பரிசில் சாதாரணமானது அல்ல
பல்லாயிரம் வீரர் , யானை ,குதிரை பலி கொடுத்து பெறப்பட்ட வெற்றி ..
வீரன் அருமை வீரனுக்கு தெரியும்
புலவனின் அரச விசுவாசம் சோழனை நெஞ்சை அசைத்தது
சிறைக்கோட்டத்துக்கு இருவரும் செல்கின்றனர் சேரனை விடுவிக்க ..
சேரன் கணைக்கால் இரும்பொறை இறந்து கிடந்தான் ..
அருகில்
ஓலைசுவடி
அதில் ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது ...
சேரன் சிறைக்காவலாளியிடம்
தாகத்துக்கு தண்ணீர் கேட்க
அவன் அலட்சியமாக தாமதமாக
கொண்டு வந்து கொடுக்கிறான் ..
அந்த நீரை அருந்தாமல்உயிர் விடுகிறான் சேரன்
சேரன் மூவேந்தரில் ஒருவன் ..
மயிர் நீப்பின் உயிர் வாழ கவரிமான் .......
வீரர்களின் வம்சம்
பு றநானூற்றின் உயிர் கசியும் 
பாடல் ...அது .. 
அது உயிரின் வலி ...

அது மானத்தை உயிராக கொண்ட
மாமன்னனின் உள்ள வலி
--------------------------------------------------------------------
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே? (புறநானூறு -74)
---------------------------------------------------------------------
போர்குடியில் குழந்தைகள்
இறந்தே பிறந்தாலும் ...
சதை பிண்டமாக பிறந்தாலும்
அக்குழந்தையை புதைக்கும் போது
வாளால் வெட்டி சிறு காயப்படுத்திய பின்னரே புதைப்பர்...
-------------------------------------------------------------------
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவர்.
இவர் சோழன் செங்கணான் என்பவரோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். சிறையில் வாடிய அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அப்போது அவர் தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது
The Online Book Shop

Sunday, 18 June 2017

சேரனது வஞ்சி

சேரனது வஞ்சி மாநகரில்
கள் விற்போர் கள் குடியர்களுக்கு
கள்ளை நீட்ட
தங்கள் கைகளால் குடியர்கள் கலயத்திலிருந்து நுரை முதலியவற்றை வழித்து எறிய
அவை மண்ணில் கலந்தன .
அவ்விடத்தை யானைகள் மிதிக்க அவ்விடம் சேறானது ..
முத்தொள்ளாயிரம் (15 ) பாடல்

Friday, 16 June 2017

சூரிய ஒளி மின்சாரம் தோல்விக்கான காரணங்களும் தீர்வுகளும்

சூரிய ஒளி மின்சாரம்
தோல்விக்கான காரணங்களும் தீர்வுகளும்
இது பல பகுதிகளை உடைய திட்டம்
1 சூரிய மின் தகடு ரூ 52000 solar panel
2 மின் கலன் ரூ 60000 battery
3 மின் திசைமாற்றி ரூ 23000 invertor
4 கம்பி வடம் ரூ 10000 wire
தமிழகத்தில் 1கிலோ வாட்
அமைக்க தோராயமாக ரூ 1,45,000/-
உற்பத்தி தமிழகத்தில்
1 நாளைக்கு 4 அலகு(unit ) *30 நாள் =120 அலகு
விலை ஒரு அலகுக்கு ரூ 6.60 அதிகபட்சமாக
மாதம் வரவு 6.60*120= ரூ 792.00
வருட வரவு 792*12= ரூ 9504
முதல் திரும்பி வர ஆகும் காலம் வட்டி/தேய்மானம் கணக்கிடாமல் 15 வருடம்
(இதில் 3 வருடத்திற்கு ஒரு முறை மின்கலன் 60000* 5 =ரூ 3,00,000மாற்ற வேண்டும் --15 வருடம் அல்ல இன்னும் 30 வருடம் ஆகலாம் )
******************************************************************************
ஆக
சூரிய சக்தி மின் திட்டம்
வெற்றிகரமாக செயல்பட வேண்டுமாயின்
என்ன செய்ய வேண்டும்
****************************************************************************
ஆக சூரிய சக்தி வெற்றிகரமாக
பெரிய அளவில் உற்பத்தியில்
பங்கு வகிக்க வேண்டுமானால்
அதன் நிறுவுவதற்கான
செலவினத்தை குறைக்க வேண்டும்..
முக்கியமாக குறைக்க வேண்டிய இரு பகுதிகள்
--------------------------------------------------------------------
1 சூரிய ஒளி தகடு
2 மின்கலன்
மின்கலன்
--------------------
இதற்கான செலவை குறைக்க
தமிழக அரசின் மின்வாரியம்
சூரிய மின்சாரத்தை அப்படியே வாங்கும் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது
(SOLAR TO GRID ) அந்த திட்டத்துடன் இணையலாம்..

(தனி நபர் /நிறுவனங்கள் அனைவருக்கும்
இந்த திட்டத்தை தமிழக அரசு விரிவாக்கலாம் )
( இந்திய அரசும் கடைபிடிக்கலாம் )
3 வருடத்திற்கு ஒரு முறை மின்கலன் மாற்றும் தேவையை அகற்றிவிடலாம் ...
---------------------------------------------------------------------
ஆக
அடுத்து குறைக்க வேண்டிய முக்கிய செலவினம்
சூரிய ஒளி தகடு
****************************
அதில் உள்ள பிரச்சினை அதன் விலை
இன்று உள்ள அதன் விலையில் இருந்து
90% விலை குறைப்பு
நடவெடிக்கை எடுக்க வேண்டும்
எப்படி இது சாத்தியம் ?
காரணமும் தீர்வும்
*****************************
1- உற்பத்தி பெரிய நிறுவனங்களிடம் மட்டுமே இருக்கிறது ..உற்பத்தியை குடிசை தொழிலாக மாற்றவேண்டும் .
2.-சூரிய மின் உற்பத்தி செய்யும் தகடு
அரிய வகை கனிமங்களை பயன்படுத்துகிறது .
விலை குறைந்த
அதிகம் உற்பத்தியாகும்
கனிமங்களை கொண்டு
தகடு செய்யும் வழிமுறையை கண்டறிய வேண்டும்.
3-மாற்றுமுறை கண்டறியுங்கள் - இயற்பியல்,வேதியல் , படித்தவர்கள் மட்டுமின்றி நீங்கள் என்ன துறையில் கற்றறிந்தீர்களோ அந்த துறை வாயிலாக இதற்க்கு தீர்வு காணுங்கள்
------------------------------------------------------------------
என்றைக்கு உங்களால் சூரிய ஒளி தகட்டின் விலையை 100 லிருந்து 10 சதமாக குறைக்க முடிகிறதோ
அன்று அலாவுதீனின் அற்புத விளக்கை கண்டறிந்து விட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------
இன்றைய சூரிய ஒளி தகட்டினால் உண்மையில் லாபமில்லை
அது என்று குடிசை தொழிலாக மாறுகிறதோ அன்று அது உலகை புரட்டிவிடும் ....

Wednesday, 14 June 2017

குழந்தை பேறின்மை --- காரணங்கள் சில தீர்வுகள்

குழந்தை பேறின்மை --- காரணங்கள் சில தீர்வுகள்
----------------------------------------------------------------------------
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
1-அதிகசெல்வ வளம்

2-வயதான காலத்தில் திருமணம் ( தான் என்ற தன முனைப்பு அதிகமாதல் - வயதாக ஆக இனக்கவர்ச்சி குறைதல்
3-விஞானத்தை அதிக அளவு பயன்படுத்தல்
(முற்போக்கு -பகுத்தறிவு -படித்தவர்கள் மத்தியில் குழந்தை பேறின்மை
அதிகம் இருப்பதை காணலாம் )
--------------------------------------------------------------------------
1- அதிகசெல்வ வளம்
*********************************
( கொளுத்தவர்க்கு குழந்தை பிறப்பது கடினம் )
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
என்பதற்கு கிருபானந்த வாரியார் ஒரு விளக்கம் சொன்னார் -
ஆறாம்நாளான சட்டியில் முருகனை நினைத்து விரதம் இருந்ததால் அகப்பையில் கரு வளரும் என்றார்.
///////////நமக்கு பகுத்தறிவு ,முற்போக்கு ??? தோன்றிய உடன் முன்னோர்கள் நகையாடப்பட்டனர் ...
விதண்டாவாதம் பேசுபவர்கள்
சுய அறிவற்ற கூட்டத்தாரால் அறிஞர்களாக பார்க்கப்பட்டனர்.///////////////
இது எப்படி
ஏழைகளுக்கும் ,
போர் காலத்திலும் அதிக குழந்தை பிறப்பர் ..
இயற்கை விவசாயத்தில்
காய்ச்சலும் பாய்ச்சலும் என்பர்..
அதிக அளவு நீர் தேக்குவதற்கு பதில் வறட்சி - வளம் -வறட்சி -வளம் என செய்தல் அதிக விளைச்சல் தரு முறை
எல்லா உயிர்க்கும் ஒரு உணர்வு உண்டு
தான் அழிந்து விடுவோமோ என என்னும்போது
தன்னுடைய இனப்பெருக்கத்தை உண்டு பண்ணும் .
இது போன்றதே விரதம் இருத்தல்
செயற்கை உணவு பற்றாக்குறையை உடலுக்கு தருதல்
அப்போது
உடல் இனப்பெருக்கத்தில் கவனம் செலுத்தும்
மற்றோன்று
இயற்கை மருத்துவ கோட்பாடு
பட்டினி என்பது உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றும் முறை என்கிறது.
புரிந்தவர்கள்
பயன்படுத்திக்கொள்க
--------------------------------------------------------------------------
2-வயதான காலத்தில் திருமணம்
*************************************************
தான் என்ற தன முனைப்பு அதிகமாதல்
வயதாக ஆக இனக்கவர்ச்சி குறைதல்
திருமணம் பருவகாலத்தில்
செய்ய வேண்டும் (16-23 ஆண் பெண் இருவருக்கும் )
(பருவத்தே பயிர் செய் )
ஸ்டேட்டஸ் பார்ப்பதைவிட
முறை மாப்பிள்ளை முறை பெண்களை மணம் முடியுங்கள் .
சமூகத்தை பணகழுதை
பின் செல்வதை விட்டு
உறவுளுடன் அன்பு சார்ந்தது முடிவு எடுங்கள் .
வயது, முறை திருமணத்தில் -
மருத்துவர்களையும் ,
அரசையும் ஒதுக்குங்கள் ..
அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை
அவர்களுடைய லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
------------------------------------------------------------------------------
3-விஞானத்தை அதிக அளவு பயன்படுத்தல்
****************************************************************
முற்போக்கு -பகுத்தறிவு -படித்தவர்கள் மத்தியில் குழந்தை பேறின்மை
அதிகம் இருப்பதை காணலாம்
மிக அதிக விஞானத்தை பயன்படுத்துபவர்கள்
விதை அற்ற பலம் காய்கறிகள்
வீரிய கலப்பின தாவரங்கள் உணவாக பயன்படுத்துதல் இவற்றை நீக்குங்கள் .
கரித்தூள் , உப்பு , வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள் என்றனர் .
///*இன்று
உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா? கிராம்பு இருக்கா? கறித்தூள் (கார்பன்), இருக்கா ?
உங்கள் சோப்பில் வெப்பம் இலையின் நற்குணம் இருக்கா?
வியாபாரிகள் என்றும் வியாபாரிகளே
நண்பர் ஒருவர் கேட்டார்
ஏன் தற்காலத்தில் வரும்
நோய்களை கட்டுப்படுத்த முடிகிறது
ஆனால் நிரந்தரமாக தீர்க்க முடியவில்லை
அதற்கு
சொன்ன பதில்
//***
எந்த வியாபாரி தன்னுடைய
வாடிக்கையாளரை இழப்பான் ?***//
வியாபாரிகள் என்றும் வியாபாரிகளே /**************
இன்னும் எத்தனை நோய் என்று கண்டுபிடிக்காத நவீன மருத்துவம் ?
4448 நோய் -என்று மொத்த நோயின் எண்ணிக்கையை முடிவு செய்த பாரம்பரிய மருத்துவம்
------------------------------------------------
வழி உங்களுடையது
அதன்
விளைவும்
உங்களுடையதே -மாயன்

WWW.VAAA.IN

THE ONLINE BOOK SHOP

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...